இந்த பழம் புளிச்சிடுச்சுன்னு விராட் கோலியை கழட்டி விட்ட 3 நடிகைகள்.. விஜய் வர்மாகெல்லாம் குரு இந்த ரன் மிஷின்

கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, ஆரம்ப காலத்தில் ஒரு சில தடுமாற்றத்தை சந்தித்தாலும் பின்பு எதிரணியை அச்சுறுத்தக் கூடிய இந்திய பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தார். அதுவும் சச்சினுக்கு பின் அவருடைய இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

அதனால் விராட் கோலி ரசிகர்களால் ‘ரன் மிஷின்’ என்று அழைக்கப்படுகிறார். இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது வாமிகா என்ற மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பே விராட் கோலியை டேட்டிங் செய்துவிட்டு, ‘இந்த பழம் புளிச்சிடுச்சு’ என்று கழட்டிவிட்ட 3 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

சாரா ஜேன் டயஸ்: இவர் 2007 இல் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை பெற்ற பின்பு கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடன் உறவில் இருந்தார். சாரா விராட் கோலியை உடன் டேட்டிங் செய்து பின்பு கழட்டிவிட்டார். இவர் விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் பிரியா என்ற கேரக்டரில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற படங்களில் பெரும்பாலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்சமயம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

தமன்னா: தமன்னா மற்றும் விராட் கோலியின் காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், இந்த பழம் புளிச்சிட்ன்னு அவரை கழட்டிவிட்டு புது பாய் பிரண்டை மில்க் பியூட்டி பிடித்தார்.

இப்பொழுது தமன்னாவின் புது காதலன் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தான். இவர்கள் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் வர்மாகெல்லாம் குரு ரன் மிஷின் விராட் கோலி. விஜய் வர்மாவையாவது கழட்டி விடாமல் தமன்னா கல்யாணம் செய்து கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சஞ்சனா கல்ராணி: விராட் கோலி ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டீமில் இருக்கும் போது நடிகை சஞ்சனா கல்ராணி உடன் டேட்டிங் செய்தார். இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில் விராட் கோலிவுடன் பழகியது போரடித்ததும் அவரை சஞ்சனா கல்ராணி கழட்டிவிட்டார்.

இவர் தெலுங்கில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரத்திலும் சிக்கினார். தமிழில் இவர் ‘ஒரு காதல் செய்தீர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.