வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாஸ்டர் படத்தில் நடந்ததை இன்னும் மறக்கல.. லோகேஷை ஊம குத்து குத்திய தளபதி

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணிகள் முதல் முதலாக உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகிய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்தனர். 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  லியோ படபிடிப்பு தளத்தில் மாஸ்டர் படத்தில் நடந்த விஷயத்தை வைத்து தளபதி லோகேஷை ஊம குத்து குத்தி விட்டார்.

Also Read: வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

மாஸ்டர் படத்தில் இயக்குனர்  லோகேஷின் பேச்சை நம்பி ஏமாந்து விட்டதாக நடிகர் சாந்தனும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த பஞ்சாயத்தை லோகேஷ் கனகராஜ் விஜய் இடம் கொண்டு சென்ற போது அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் என்ன என்பது தற்போது வைரலாக பரவுகிறது.

சாந்தனு நடிப்பில் இரண்டு நாளைக்கு முன்பு இராவண கோட்டம் என்ற படம்  வெளியாகி உள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த சாந்தனுவை லோகேஷ் தனது  வீட்டிற்கு டின்னருக்கு வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் படு பிஸியாக இருந்த சாந்தனு லோகேஷ் கூப்பிடும் போதெல்லாம் போகாமல் மறுத்திருக்கிறார்.

Also Read: ஜெயிலர் படத்தால் எகிறிய சம்பளம்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் சூப்பர் ஸ்டார்

தற்போது லியோ பட ஷூட்டிங்கில் விஜய்யை எதார்த்தமாக சாந்தனு சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது விஜய் இடம் சாந்தனுவை அழைத்துச் சென்ற லோகேஷ், ‘நான் வீட்டுக்கு கூப்பிட்டா இவன் வரமாட்டான். ரொம்ப பிகு பண்றான்’ என்று குறை சொல்லி இருக்கிறார். உடனே விஜய், ‘நீ அவன கூப்பிட்டு வச்சு பண்ணதுக்கு அவன் உன் வீட்டுக்கு வேற வரணுமா’ என்று கலாய்த்துள்ளார்.

ஏனென்றால் மாஸ்டர் படத்தில் சாந்தனுவின் சீன்ஸ் குறைக்கப்பட்டதால் ஒரு புறம் லோகேஷ் மீது சாந்தனுவுக்கு சிறிது கோபம் இருக்கிறது. அதை அவர் மீடியாவிலும் அவ்வப்போது வெளிப்படையாக சொல்கிறார். இருப்பினும் விஜய்க்கும் இந்த விஷயம் நன்றாக தெரிந்திருக்கிறது. என்னதான் நண்பர்களாக இருந்தாலும் நம்ப வச்சு மோசம் செய்யக்கூடாது. அதனால் தான் முன்பே லோகேஷை விஜய் ஊம குத்து குத்திவிட்டார்.

Also Read: அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த 5 படங்கள்.. விஜய்க்குப்பின் ஒர்க் அவுட்டான செம கெமிஸ்ட்ரி

Trending News