Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

எல்லாத்துக்கும் துணிந்து சன் பிக்சர்ஸ் போடும் கூட்டணி.. தோல்வி முகம் காட்டினாலும் சூர்யாக்கு அடித்த ஜாக்பாட்

எல்லாத்துக்கும் துணிந்து சன் பிக்சர்ஸ் போடும் கூட்டணி.. தோல்வி முகம் காட்டினாலும் சூர்யாக்கு அடித்த ஜாக்பாட்

சூர்யா தற்போது 60 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் கை கொடுக்கவில்லை. 35 கோடிகள் சம்பளம் வாங்கி வந்த அவர் திடீரென […]

சூர்யா தற்போது 60 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் கை கொடுக்கவில்லை. 35 கோடிகள் சம்பளம் வாங்கி வந்த அவர் திடீரென டபுள் மடங்கு உயர்த்தி விட்டார்.

தற்போது ஆர் ஜே பாலாஜி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என பெயரிடப்பட்டதாக ஒரு தகவல். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா “லக்கி பாஸ்கர்” பட புகழ் இயக்குனர் வெங்கி அட்லூறியுடன் இணையப் போகிறார். இந்த படத்திற்குப் பின் அடுத்த லிஸ்டில் இருப்பது சன் பிக்சர்ஸ்.

கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. வெற்றிமாறனுடன் கமிட்டாகிருந்த வாடிவாசல் படமும் ட்ராப்பாகிவிட்டது . இதனால் சூர்யாவிற்கு 60 கோடிகள் சம்பளம் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இப்பொழுது சன் பிக்சர்ஸ் உடன் கமிட்டாகி உள்ளார்.

ஏற்கனவே சூர்யா, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணைந்து நடித்த படம் எதற்கும் துணிந்தவன். அந்த படம் அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கவில்லை. இதனால் இந்த கூட்டணி மீண்டும் அமைந்ததில் பெரிய ஆச்சரியம்தான். சன் பிக்சர்ஸ் எல்லாத்துக்கும் துணிந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரனை இந்த ப்ராஜெக்ட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து வருகிறது.

சூர்யா நடித்த கங்குவா படம் படுதோல்வி ஆனது. அதனால் அந்தப் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஓனர் ஞானவேல் ராஜாவிற்கு மற்றொரு படம் பண்ணுவதற்கு சூர்யா திட்டமிட்டு இருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வந்ததால் முதலில் இங்கே வந்துவிட்டார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.