திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிலேயே முன்னணி நிறுவனமாக விளங்கும் சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. தற்சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை குறித்த தகவல்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.
அதாவது, அரசியலுக்கு வருவீர்கள் வாருங்கள் நாம் படம் பண்ணலாம் என்று சொல்லி அவர்களின் காலி செய்கிறது சன் பிக்சர்ஸ். ரஜினி, விஜய், சூர்யா இவர்களின் படம் தோல்வி படங்களாக மக்களிடையே கொண்டு சேர்ந்து. இவர்களைப் பற்றி மக்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறார்கள்.
இப்படித்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் நடித்த சூர்யாவை பட்டி தொட்டி எங்கும் இருக்கும் பாமர மக்களும் போற்றும்படி இருந்தார். இப்பொழுது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை காரணம் சன் பிக்சர்ஸின் எதற்கும் துணிந்தவன்.
இதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, சன் பிக்சர்ஸ் தயாரித்த தர்பார், அண்ணாத்த, தொடர் தோல்வி கொடுத்த ரஜினிகாந்த்தால் வாய் திறக்காத படி இருக்கிறார். தற்போது ரஜினியின் 169-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ள படம் ‘தலைவர் 169’.
இதனால் ரஜினி கொஞ்சம் பயத்தில் இருப்பதாக தெரிகிறது. இவர் மட்டுமல்ல விஜய், நல்ல பெயருடன் வசூல் ரீதியாக மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்று தந்தது. இவ்வாறு தளபதி விஜய் அரசியல் பேசாத வரைக்கும் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் உடன் தொழில் தொடங்கும்போதே பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தாலும் இப்பொழுது விஜய்க்கு கெட்ட பெயர் மட்டுமே மிச்சம் இதுதான் சன் பிக்சர்ஸ். ஏ ஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், இவர்கள் வரிசையில் நெல்சனை வைத்து சன் பிக்சர்ஸ் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக ஏகே 63 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் இணைய உள்ளார். இந்த பிரம்மாண்ட கூட்டணி இணைந்தால் அடுத்த பலியாடு அஜித் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.