செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வடிவேலு குரலில் செம ஹிட்டடித்த 6 பாடல்கள்.. விஜய்யோடு பாட்டு ஆட்டம் என பின்னிய வைகைப்புயல்

ஆரம்ப காலங்களில் கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சிகளில் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வடிவேலு 1994 ஆம் ஆண்டு ரிலீசான காதலன் திரைப்படத்திற்கு பிறகு கோலிவுட்டின் முக்கிய நபராக ஆனார். காமெடிகளில் எந்த சாயமும் பூசாமல் தன்னுடைய எதார்த்தமான வார்தைகளாலேயே ரசிகர்களை கட்டி போட்டார். நகைச்சுவை மட்டுமில்லாமல் வடிவேலு நன்றாக பாடக்கூடியவர். தன்னுடைய காமெடி காட்சிகளில் கூட ஆங்காங்கே ஏதேனும் ஒரு பாடலை கலந்து விடுவார். வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் இருக்கிறார்.

கோவில்: 2004 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த கோவில் படத்தில் சிம்பு, சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வடிவேலு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கவிஞர் சினேகனின் பாடல் வரிகளில், ‘காதல் பண்ண திமிரு இருக்கா’ என்னும் சூப்பர் ஹிட் பாடலை கோவை கமலாவுடன் இணைந்து பாடியிருந்தார்.

Also Read: நடிகர்களை காமெடியில் ஓரங்கட்டிய வடிவேலுவின் 6 படங்கள்.. இப்பவரைக்கும் கொண்டாடப்படும் கைப்புள்ள கதாபாத்திரம்

காலம் மாறி போச்சு: காலம் மாறி போச்சு திரைப்படம் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் வி.சேகர் இயக்கத்தில் வெளியான படம். இந்த படம் பாண்டிய ராஜன், சங்கீதா, ஆர்.சுந்தர்ராஜன், ரேகா, வடிவேலு, கோவை சரளா நடித்த திரைப்படம். இந்த படத்தில் ‘தேனிசை தென்றல்’ தேவா இசையில், கவிஞர் வாலியின் வரிகளில் ‘வாடி பொட்டப்புள்ள’ என்னும் பாடலை வடிவேலு பாடினார். இந்த பாடலுக்கு இணையாக இதுவரை வேறு எந்த பாடலும் அமையவில்லை.

ஜெய் சூர்யா : 2004 ஆம் ஆண்டு இயக்குனர் மனோஜ்குமார் இயக்கத்தில் அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடித்து ரிலீசான திரைப்படம் ஜெய் சூர்யா. இந்த படத்தில் வடிவேலு, சாயாசிங், லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ‘கட்டுனா இவளை கட்டணும் டா’ என்னும் பாடலை வடிவேலு பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் தேவா, பாடலை எழுதியவர் பா.விஜய்.

ஆறு: 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆறு. இந்த படத்தில் த்ரிஷா, வடிவேலு, ஐஸ்வர்யா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி, இசையமைத்த ‘ஃப்ரியா விடு மாமே’ என்ற பாடலை வடிவேலு, ஜெஸ்ஸி கிஃப்ட்டி என்பவருடன் இணைந்து பாடியிருந்தார்.

Also Read: வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்

பகவதி: 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து மிகப் பெரிய ஹிட் அடித்த ஆக்சன் திரைப்படம் பகவதி. இந்த படத்தில் ரீமாசென், ஜெய், மோனிகா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். ‘தேனிசை தென்றல் தேவா’ இசையமைப்பில் விஜயும், வடிவேலும் இணைந்து பாடிய ‘போடாங்கோ’ என்னும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

எல்லாமே என் ராசாதான்: 1996 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் எல்லாமே என் ராசாதான். இந்த படத்தில் சங்கீதா, கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலு சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த அந்த சமயம் ராஜ்கிரண் வடிவேலுக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தார். இளையராஜா இசையில் வடிவேலு முதலில் பாடிய பாடல் ‘எட்டணா இருந்தா’ என்னும் ஹிட் பாடல் தான்.

Also Read: ஓவர் ஆக்ட்டிங் செய்த நடிகர்.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கண்டித்த சிவாஜி

Trending News