வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் கேரக்டர்.. வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுத்த மணிரத்தினம்

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் பங்கேற்றனர்.

சோழர்களின் எழுச்சிக்கு முன் நடந்த சோழ கால வரலாறை மையமாக கொண்டு புனையப்பட்ட கதை தான் பொன்னியின் செல்வன், இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

Also Read : சோழ ராஜ்யத்தை கண் முன் நிறுத்திய மணிரத்தினம்.. மிரளவிட்ட பொன்னின் செல்வன் ட்ரெய்லர்

நேற்று விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதனை மறுத்து விட்டார் என்றும் கூறியிருந்தார். ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர் பெரிய பழுவேட்டரையர்.

ரஜினி, பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்த கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கூறினார். ஒரு பேட்டியின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் கேரக்டரை யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார்.

Also Read : ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய பொன்னியின் செல்வன்.. RRR, KGF-ஐ ஓரங்கட்டிய மணிரத்னம்

இதைக்கேட்டு குஷியான ரஜினி, பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டாராம். பொதுவாகவே புத்தகங்களை படிப்பதற்கு முன்பாக மொத்த பக்கங்களை கணக்கில் வைத்து கொள்வாராம். பொன்னியின் செல்வன் மொத்தம் 2000 பக்கங்களை கொண்டது என தெரிந்ததும் படிப்பதை விட்டுவிட்டாராம்.

இப்போது மணிரத்தினத்திடம் பொன்னியின் செல்வன் கதையின் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மணிரத்தினத்திடம் கேட்டாராம். ஆனால் மணிரத்தினம் உங்கள் ரசிகர்களிடம் என்னால் திட்டு வாங்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். பெரிய பழுவாக ரஜினியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும் நடித்து இருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும்.

Also Read : மணிரத்தினத்தின் கழுத்தை நெறிக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சுயநல வாதியாக மாறிய நடிகர்கள்

Trending News