திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

Heroine Supporting Roles: சமீப காலமாக வெளியாகும் படங்களில்  கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை விட சப்போர்ட்டிவ் கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய இந்த 6 துணை நடிகைகள் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு திறமையுடனும் அழகுடனும் இருக்கின்றனர். அதிலும் கமல் மருமகளும், ரஜினி மருமகளும் அழக அடிச்சுக்க ஆளே இல்ல

ரவீனா ரவி: பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி, தற்போது டாப் நடிகர்களின் படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகியாக நடித்து வருகிறார். அதிலும் பிரதிப்  ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தார். திவ்யா என்ற அந்த கேரக்டரில் ரவீனா ரவி கனகச்சிதமாக பொருந்தித்தார்.

இவர் யோகி பாபுவின் காதல் மனைவியாக அந்த படத்தில் எந்தவித தயக்கமும் இன்றி அழகை பொருட்படுத்தாமல் மனதை பார்த்து காதலிக்க கூடிய பெண்ணாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவருடைய கதாபாத்திரம் கதாநாயகி விட அதிகமாக பேசப்பட்டது.

Also Read: 3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

பிரார்த்தனா நாதன்: இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களுக்கான பல போட்டி நிகழ்ச்சிகளில் ராம்ப் வாக் செய்திருக்கிறார். பின்பு படங்களிலும் நடிக்க துவங்கினார். பிரதிப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே நடிகை பிரார்த்தனா நாதன்  ‘நமீதா’ என்ற கேரக்டரில்நடித்தார்.  இரண்டாம் நிலை கதாநாயகியாக அந்த படத்தில் நடித்திருந்தாலும், நடிப்பில் மட்டுமல்ல அழகிலும் அந்த படத்தின் கதாநாயகி இவானாவிற்கு டஃப்  கொடுத்தார்.

அனு சித்தாரா: மலையாள நடிகையான அனு சித்தாரா தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் பொதுநலம் கருதி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பெரிதாக  கவனிக்கப்படவில்லை.  ஆனால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கும் அனு சித்தாரா, சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில்  நடித்திருந்தார். அதுவும் சிம்புவின் தங்கையாக படம் முழுக்க பயணித்தார். இவருடைய அழகை பார்த்து தற்போது இளசுகள் தவிக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த தமிழ் படங்களில் இவர் நடிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

Also Read: மன்சூர் அலிகானை விட கம்மியான சம்பளம் வாங்கிய விஜய்.. ரகசியத்தை போட்டு உடைத்த வீரபத்திரன்

சஞ்சனா திவாரி: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சனா திவாரி, ஒரு நடனக் கலைஞர். இவர் சமீப காலமாக சோசியல் மீடியா கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அதன் பலனாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் வாரிசு படம். விஜய்யின் வாரிசு படத்தில் தளபதியின் அண்ணன் மகளாக நடித்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் சஞ்சனா தீவாரியின் அழகு இருந்தது.

ஸ்வாதிஸ்டா  கிருஷ்ணன்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் விக்ரம். இந்த படத்தில் கமலின் மருமகளாக நடிகை ஸ்வாதிஸ்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் விக்ரம் படத்திற்கு முன்பே ஒரு சில வெப் சீரிஸ், குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனால் விக்ரம் படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து  ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. 

Also Read: நெல்சனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த மாறன்.. ஜெயிலரை வைத்து பல நாள் கனவை நிறைவேற்றும் தந்திரம்

மிர்னா மேனன்: கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-திற்கு மருமகளாக நடித்த நடிகை தான் மிர்னா மேனன். இவர் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். 2016 ஆம் ஆண்டு  வெளிவந்த பட்டதாரி படத்தில் மிர்னா மேனன் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதன் பின் நடிகர் அபி சரவணனுடன் காதலில் விழுந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திடீரென்று அவரைப் பிரிந்த  மிர்னா மேனன் சில வருடங்களாக சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார். பின் மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தால் இப்போது சத்தமே இல்லாமல் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா மோகனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Trending News