Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப் படத்திற்கு தடை ஏன்.? கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தக் லைஃப் படத்திற்கு தடை ஏன்.? கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Thug Life: மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பே கமல் கூறிய ஒரு கருத்துக்காக கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் […]

Thug Life: மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பே கமல் கூறிய ஒரு கருத்துக்காக கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் படம் வெளியாகாது என பகிரங்க மிரட்டல் கூட வந்தது. இது தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியது.

இந்த தடைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளது. கமல்ஹாசன் பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறுவது சரி கிடையாது.

தக் லைஃப் படத்திற்கு தடை ஏன்.?

அது உயர்நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. எப்படி அவ்வாறு கூறலாம். அதே போல் படத்தை வெளியிட தடை விதிக்க கூடாது. உரிய சான்றிதழ் பெற்ற பிறகு இந்த படத்தையும் தடை செய்ய முடியாது.

தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யார் என்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா என ஃபயர் விட்டு வருகின்றனர். ஆனாலும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இனி படம் வந்தா என்ன வரலைன்னா என்ன என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.