Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பயோபிக்கை தவிர்த்த சூர்யா.. இயக்குனரின் கதைக்கு கை கொடுத்தார்!

பயோபிக்கை தவிர்த்த சூர்யா.. இயக்குனரின் கதைக்கு கை கொடுத்தார்!

Suriya : சூர்யா இப்போது கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கும் கருப்பு படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதுதவிர அடுத்தடுத்த இயக்குனர்களை புக் செய்து வருகிறார். […]

Suriya : சூர்யா இப்போது கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கும் கருப்பு படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதுதவிர அடுத்தடுத்த இயக்குனர்களை புக் செய்து வருகிறார்.

அந்த வகையில் சூர்யாவின் 46 ஆவது படத்தை வெங்கி அட்லூரி இயக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தை சஞ்சய் காந்தியின் பயோபிக்காக தான் எடுக்க இருந்தார்கள். அரசியல் குடும்பத்தில் பிறந்த சஞ்சய் காந்தி தனது தாய்க்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார்.

மேலும் அவர் பிரதமராகவும் பதவியேற்பார் என்று நினைத்த நிலையில் எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்து விட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கலாம் என்றும் அதில் சஞ்சய் காந்தியாக சூர்யா நடிக்க இருந்தார்.

பயோபிக் படத்தில் நடிக்க மறுத்த சூர்யா

ஒருவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க வேண்டும் என்றால் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் உரிமை வாங்க வேண்டும். இதனால் இது தாமதமாகி கொண்டே போனது. ஏற்கனவே சூர்யா சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்து விட்டார்.

அப்பொழுதுதான் வெங்கி அட்லூரி குடும்ப கதையை கூறியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸ் கூட முழுமையாக சொல்லாத நிலையில் சூரியாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டதாம். ‌ ஆகையால் உடனடியாகவே இந்த படத்திற்கான வேலை தொடங்கப்பட்டதாக இயக்குனர் கூறி இருக்கிறார்.

மேலும் இதற்கான படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. சூர்யா கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களில் சருக்களை சந்தித்தாலும் அடுத்தடுத்து அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்கும் என்ற அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.