Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரே உறைக்குள் இரண்டு கத்தி.. சூர்யாவை வைத்து சன் பிக்சர்ஸ் போடும் கணக்கு

ஒரே உறைக்குள் இரண்டு கத்தி.. சூர்யாவை வைத்து சன் பிக்சர்ஸ் போடும் கணக்கு

Suriya : சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல கோடிகளை முதலீடு செய்து அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தை தயாரிக்கிறது. அதேபோல் அல்லு அர்ஜுன் மற்றும் […]

Suriya : சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல கோடிகளை முதலீடு செய்து அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தை தயாரிக்கிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ காம்போவில் உருவாகும் படத்திற்கும் பிரம்மாண்ட பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறது. இதில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளமே 200 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. இப்போது அடுத்த படத்திற்கும் பூஜை போட இருக்கின்றனர்.

அதாவது சன் பிக்சர்ஸ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். சமீபகாலமாக சூர்யாவுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. கங்குவா தோல்வியடைந்த நிலையில், ரெட்ரோ சுமாரான வெற்றியை கொடுத்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா

இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிக்க இருக்கிறார். இறுதிச்சுற்று, சாணி காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

இந்த சூழலில் அருண் மாதேஸ்வரன் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக இந்த படத்தை அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இப்போது சன் பிக்சர்ஸின் கூலி படத்தை லோகேஷ் இயக்குகிறார். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே சூர்யாவை வைத்து இரும்புகை மாயாவி படத்தை எடுப்பதாக இருந்தார். அது சில காரணங்களால் தாமதமான நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வெயிட்டான கதாபாத்திரத்தை சூர்யாவுக்கு கொடுத்திருந்தார்.

மேலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு படத்தையும் லோகேஷ் எடுக்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரே உறைக்குள் இரண்டு கத்தி இருப்பது போல சூர்யா மற்றும் ரோலக்ஸ் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு படம் உருவாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.