புதன்கிழமை, ஜனவரி 15, 2025

90க்கு பிறகு திரும்ப வரும் கலாச்சாரம்.. கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் பின்பற்றும் டெக்னிக்

கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கி அதற்கு பின்னர் வந்த திரைப்படங்கள் வரை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிக்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்தது.

அந்த வரிசையில் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் உட்பட பலரும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் 90 கால கட்டத்திற்குப் பிறகு இது போன்ற படங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை. ஹீரோக்களும் அந்த மாதிரியான கதையில் நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

மேலும் ரசிகர்களும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள், ட்விஸ்ட் என்று எதிர்பார்க்க தொடங்கினர். அதைத் தொடர்ந்து பேய் கதைக்கும் நல்ல மவுசு இருப்பதால் அப்படிப்பட்ட கதையை எடுத்து தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்கத் தொடங்கினர். அதனால் இந்த காலத்திற்கு ஏற்றார் போல ஹீரோக்களும், இயக்குனர்களும் மாறத் தொடங்கி விட்டார்கள்.

தற்போது அந்த பழைய பாணி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வர தொடங்கி இருக்கிறது. இப்போது இருக்கும் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்கள். சமீபத்தில்கூட ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு திரைப்படமும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சார்ந்ததுதான்.

அதைத் தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். மேலும் கார்த்தி தற்போது சர்தார் திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஹீரோக்கள் இரு வேடங்களில் கலக்கி வரும் வேளையில் நடிகர் சூர்யாவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கி விட்டார். ஏனென்றால் சூர்யா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படமும் ஒன்று.

அந்த திரைப்படத்தில் தான் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். இது தவிர பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி உண்டு. ஆக மொத்தம் தமிழ் சினிமா ஆக்ஷன் மற்றும் பேய் படங்களை தவிர்த்து தற்போது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு மாறி வருகிறது.

Trending News