BB7

சாப்பாட்டுக்காக அடித்துக் கொள்ளும் பிக் பாஸ் வீடு.. செம்ம காண்டில் வெளியேறிய மாயா, கூல் சுரேஷ்

Bigg Boss season 7 Tamil: அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து இருக்கிறது. 26வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான மாயா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதுதான்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஏழாவது சீசன் பெரிய போராட்டக் களமாகவே இருக்கிறது. ஒன்னுக்கு ரெண்டு வீடு என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். அது காட்டு தீயாக எரிந்து கொண்டு இருக்கிறது. கேப்டன் தன்னை அதிகம் கவராதவர்கள் என ஒரு ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது. இதனாலேயே வாரத்தின் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகி விடுகிறது.

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்களில் பெரிய பாஸ் வீடு ஜெயிக்கிறதா அல்லது சின்ன பாஸ் வீடு ஜெயிக்கிறதா என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இன்று நடத்தப்பட்ட டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் வீடு ஜெயித்து விட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாருக்கும் உணவு இல்லை என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். இதனால் கூல் சுரேஷ் மற்றும் மாயா பயங்கர காண்டாகி விட்டார்கள்.

ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்த நிக்ஸனிடம் மாயா நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாமா என்று கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டார். உடனே மாயா மற்றும் கூல் சுரேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று விட்டன.ர் இந்த வார கேப்டன் ஆக இருக்கும் பூர்ணிமா பனிஷ்மெண்டில் இருக்கும் நீங்கள் சாப்பாட்டிற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வது தப்பு என சொல்ல, மாயா மட்டும் பூர்ணிமாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது.

சண்டை வந்தது தான் சாக்கு என்று ரவீனா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பறந்துவிட்டார். அங்கே மணி இருப்பதால்தான் ரவீனா சென்றிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இரண்டு நாட்களாக ரவீனா நன்றாக விளையாடுகிறார் என பார்வையாளர்கள் சொல்லி வந்த நேரத்தில் மீண்டும் பழைய குருடி கதவ தெரடி என்பது போல் சமயத்தை தனக்கு சாதகமாக வைத்து மணியிடம் சென்று விட்டார்.

ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் போட்டியாளர்கள் ரொம்பவும் மந்தமாக இருக்கிறார்கள் என பார்வையாளர்களிடையே ஒரு கருத்து இருக்கிறது. மேலும் இந்த சீசனில் விளையாட வந்திருப்பவர்கள் யாருக்குமே டைட்டில் கார்டு வெல்லும் அளவுக்கு திறமை இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் இவர்கள் சாப்பாட்டிற்காக அடித்துக் கொள்வது பார்வையாளர்களை ரொம்பவும் வெறுப்படையச் செய்திருக்கிறது.

Ajith BB

பிக் பாஸ் வீட்டில் அலப்பறையை கூட்டப் போகும் 5 வைல்டு கார்டு என்ட்ரி.. எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித் நண்பர்

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைய இருக்கும் ஐந்து போட்டியாளர்கள்

bb7-vanitha

முதல் இடத்திற்காக பஜாரி போல் இறங்கிய வனிதாவின் வாரிசு.. சரிக்கு சரியாக நின்னு அடிக்கும் சைக்கோ

BB7 Promo: இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் ரேங்கிங் டாஸ்க் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஏழாவது சீசனில் இன்று ரேங்கிங் டாஸ்க் போட்டியாளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு இந்த டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களிடம் நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சிலருடைய சுயரூபம் எல்லாம் இந்த டாஸ்கின் மூலம் தான் வெளிப்படும்,

அந்த வகையில் சீசன் 7க்கான ரேங்கிங் டாஸ்கில் முதலிடம் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிட் ஆகிற வாய்ப்பையும் குறிக்கும். இதில் முதல் இடத்தை பிரதீப் பிடித்துக் கொண்டு மற்றவர்கள் யாருக்குமே கொடுக்க மறுக்கிறார். ‘இந்த வீட்டில் என்டர்டைன்மெண்டா பெருசா நீங்க எதுவும் செய்யல, இந்த இடத்துல இருப்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை’ என நிக்சன் பிரதீப்பை முதலிடத்தில் இருந்து நகரச் சொல்கிறார்.

அவர் மட்டுமல்ல விஷ்ணுவும், ‘பிரதீப் முதலிடத்திற்கு தகுதியானவரே கிடையாது. நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறீர்கள்’ என முதல் இடத்தை விட்டு நகரச் சொல்கிறார். உடனே பிரதீப், ‘ப்ரோமோவுக்காக நான் விளையாடவில்லை’ என்று விஷ்ணுவுக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக வந்த போட்டியாளர்கள் எல்லாம் பிரதீப்பை கன்வின்ஸ் செய்து முதல் இடத்தை பிடித்துக்கொள்ள பார்க்கின்றனர்.

கடைசியாக வத்திக்குச்சி வனிதாவின் வாரிசு ஜோவிகாவிற்கும் பிரதீப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. ஜோவிகா பயன்படுத்தும் ஆடை, அணிகலன்கள் பார்த்தால் அவர் வசதியான வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா மிடில் கிளாசில் ஃபேமிலியில் இருந்து வந்த நான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று வனிதாவின் வாரிசுவுடன் பிரதீப் நின்னு விளையாடுகிறார்.

ஜோவிகாவும் பிரதீப்பிடம் தர லோக்கலாக இறங்கி பஜாரி போல் வாடா போடான்னு சண்டை போடுகிறார். இவருக்கு பின் மாயா, யுகேந்திரன் உள்ளிட்டோரெல்லாம் பிரதீப் நின்று கொண்டிருக்கும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு சந்தக் கடை போலவே மாறிவிட்டது. அடிதடி சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒவ்வொரு நாளும் கொளுத்திப் போடும் வேலையை பார்க்கும் பிக் பாஸ் இந்த முறை ரேக்கிங் டாஸ்கின் மூலம் ஒருவர் மற்றவருடன் உச்சகட்ட அளவில் சண்டை போடும் அளவுக்கு பத்த வச்சுட்டார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிரதீப் இடம் யாரும் இந்த முதல் இடத்தை மட்டும் பறித்து விட முடியாது. அவர்தான் இந்த டாஸ்கில் வென்று கோல்ட் ஸ்டார் வாங்க போகிறார்.

மேலும் ரேங்கிங் டாக்கில் முதலிடத்தைப் பிடித்த பிரதீப் தான், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். அவ்வப்போது இவர் சைக்கோ போல் நடந்து கொண்டாலும், மனதில் பட்டதை யோசிக்காமல் செய்கிறார். பிரதீப் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Kushboo

பெண்களே வெறுக்கும் அளவிற்கு நடந்து கொண்ட 6 நடிகைகள்.. குஷ்புக்கு போட்ட செருப்பு மாலை

அமலா பால்: இன்றுவரை வளர முடியாமல் போனதற்கு இவருடைய கேரக்டரும் ஒரு காரணமாக இருக்கலாம். கல்யாணத்துக்கு பிறகும் பார்ட்டி, பப் என சுற்றி திரிந்து வந்தார். இதனால்

bb7-today-promo-raveena-mani

மூளையே இல்லாத முட்டாள் பயலா இருக்கான்.. காதலைப் பிரித்து சகுனி வேலை பார்த்த பிக் பாஸ்

BB7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதுவும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காதல் ஜோடிகளாக முதல் நாளிலிருந்து சுற்றித்திரிந்தவர்களை சகுனி வேலை பார்த்து பிக்பாஸ் பிரித்து வைத்துவிட்டார். பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் விதவிதமான டாஸ்க்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று போட்டியாளர்களிடம் லைக், டிஸ் லைக் என இரண்டு பேட்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமில் தான் ரவீனா இதுவரை இல்லாமல் சிறப்பாக விளையாடி இருக்கிறார். லைக் பேச்சை சரியாக யோசித்து விளையாடுவதாக பிரதீப்புக்கு கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பாராத வகையில் டிஸ் லைக் பேச்சை தன்னுடைய காதலன் மணிக்கு கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்.

பிரதீப் முன்பு தன்னை இப்படி அசிங்கப்படுத்தி விட்டாரே என்று மணி ரவீனாவை தனியாக அழைத்து மண்டையை கழுவுகிறார். பிக் பாஸ் வீட்டில் ரவீனாவை தனியாக விளையாட விட்டால் அவர் சிறப்பாக விளையாடுவார். ஆனால் மணியுடன் சேர்ந்து இருக்கும் வரை ரவீனா உருப்பட மாட்டார்.

காதலிக்க வேண்டும் என்றால் எதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வரணும். வெளியிலேயே அதை செய்யலாமே! இந்த அரிய வாய்ப்பை மணி சரியாக பயன்படுத்த மாட்டேங்கிறார். தனித்து விளையாட நினைக்கும் ரவீனாவையும் விளையாட விடலை, காதல் என்ற பெயரில் அரெஸ்ட் செய்கிறார். சீக்கிரம் இவரை வெளியே அனுப்புவது தான் நல்லது.

இப்போதுதான் ரவீனா தன்னுடைய கேமை ஆரம்பிச்சிருக்கார். இந்த டாஸ்கின் மூலம் ரவீனா- மணி காதல் ஜோடிக்கு இடையே முட்டிக்கொண்டனர். ‘உன்னை நான் பார்த்திருக்கவே கூடாது’ என்று மணி உச்சகட்ட விரக்தியில் சொல்ல, உடனே ரவீனா கோபித்துக் கொண்டு  அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார் சொல்லப்போனால் ரவீனா மிகச் சிறப்பாக விளையாடத் துவங்கியிருக்கிறார்.

ஆனால் ‘மூளையே இல்லாத முட்டாள் பயலா இருக்கான்’ என்று பூர்ணிமா மணியை குறித்து விமர்சிப்பது 100% உண்மை. ரவீனாவை தனித்து விளையாட விட்டால் அவர் நிச்சயம் பைனல் வரை செல்ல முடியும். நிக்சன் ரவீனா கிட்ட பேசுறது மணிக்கு பிடிக்கல, மணி ரவீனா கிட்ட பேசுறது ஐஷுக்கு பிடிக்கல. மொத்தத்துல இவங்க எல்லாரும் பண்றத பாக்க சகிக்கவே இல்ல. இதனால் தான் இப்போது பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்து மணி- ரவீனா ஜோடியை பிரித்துவிட்டு இருக்கிறார்.

BB7 promo

பிக் பாஸ் வீட்டை லவ்வர்ஸ் பார்க்காக மாற்றிய காதல் புறாக்கள்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா

BB7 Tamil Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி சீசனுக்கு சீசன் சண்டை, சச்சரவு, பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காதோ அப்படித்தான் காதல் கண்டன்டுக்கும் பஞ்சம் இருக்காது. போட்டியாளர்களுக்கு இடையே காதல் இல்லை என்றாலும் ஏடாகூடமாக டாஸ்க் கொடுத்து கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்து விடுவார் பிக் பாஸ். அதற்கு ஏற்றது போல் தான் சீசனுக்கு சீசன் ஜோடியும் வந்து அமையும்.

முதல் சீசனில் ஆரவ், ஓவியா காதல் ஜோடி கொடி கட்டி பறந்ததோடு அவர்களுடைய மருத்துவ முத்தமும் வைரலானது. ஒரு கட்டத்தில் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்காததால் டைட்டில் வாங்க வேண்டிய ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார். இரண்டாவது சீசனில் மகத், யாஷிகா ஆனந்த்திற்கு தன்னால் முடிந்த வரை நம்பிக்கையை கொடுத்துவிட்டு சாரி எனக்கு வெளியே ஆள் இருக்கு என்று டாடா காட்டினார்.

மூன்றாவது சீசனில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலை பிக் பாஸ் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கவிலியா என்பது அவர்களுடைய தேசிய கீதம் ஆகவே இருந்தது. ஆனால் இந்த ஜோடி வீட்டை விட்டு வெளியே வந்ததுமே பிரேக் அப் செய்து கொண்டார்கள். இதில் கவின் திருமணமும் செய்துவிட்டார். நான்காவது சீசனில் பாலா மற்றும் சிவானியின் காதல் கதை ஓடியது.

ஐந்தாவது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை அமீர் பாவனியை உருகி உருகி காதலித்து வந்தார். போட்டி முடிந்து வெளியே வந்ததும் காதலை பாவனி ஏற்றுக் கொண்டார். தற்போது இந்த ஜோடி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். ஆறாவது சீசனில் ஷிவின் கதிரை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் ப்ரீஸ் டாஸ்க்கில் கதிர் தன்னுடைய காதலியை ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டிற்கும் அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.

எல்லா சீசனிலும் போட்டியாளர்கள் உள்ளே வந்து தான் காதலில் லாக் ஆவார்கள். ஆனால் இந்த ஏழாவது சீசனில் ஏற்கனவே காதலித்து வந்த ரவீனா மற்றும் மணி உள்ளே வந்து தங்களுடைய ரொமான்ஸை அரங்கேற்றி வருகிறார்கள். இவர்களுடைய தொல்லை தாங்காமல் மணியை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தும் இவர்களுடைய சேட்டை குறையவில்லை.

கடந்த வாரத்தில் இருந்து நிக்சன் மற்றும் ஐஷு மீது பார்வையாளர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் பேசுவது காதல் ஜோடி போல் இருக்கிறது என கமெண்ட் செய்து வந்தார்கள். இதை உறுதிப்படுத்தும் படி இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இவர்கள் இருவரும் பேசும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது பிக் பாஸ் குழு. நிக்சன் காதலால் போட்டியை தவற விட்டுக் கொண்டிருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் பார்வையாளர்கள்.

BB7 Kamal

ஒன்னுல்ல, ரெண்டு இல்ல 5 வைல்டு கார்டு என்ட்ரி.. இந்த ரெண்டு பேர் எவிக்சன் உறுதி

BB7 Wild Card Entry: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது வாரத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இப்போது பிக் பாஸ் ஆகிவிட்டார். வீட்டை இரண்டாக பிரித்து வைத்து கொளுத்தி போட்டதோடு, தற்போது ஓபன் நாமினேஷன் வைத்து அதில் பெட்ரோலையும் ஊற்றி விட்டார். இப்போது வீடு பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

மற்ற சீசன்களில் எல்லாம் இல்லாத அளவுக்கு இந்த சீசன் எப்போதுமே காட்டுக் கூச்சலாக தான் இருக்கிறது. ஆகாதவன் பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம் என்று ஆகிவிட்டது. சுவாரஸ்யம் இல்லாதவர்கள் என்று ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு இரண்டு வீட்டிற்கும் நடுவில் நடக்கும் பஞ்சாயத்தே நாள் முழுவதும் சரியாக இருக்கிறது.

இந்த வாரம் திங்கட்கிழமையே சூடு பிடித்து இருக்கிறது. கிளீனிங் டாஸ்க்கில் மணி மற்றும் விஷ்ணு மோதிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியின் நடுவராக இருந்த கேப்டன் பூர்ணிமாவை ஸ்மால் பாஸ் வீட்டினர் வறுத்து எடுத்து விட்டனர். சண்டை பெருசாகி கடைசியில் விஷ்ணுவுக்கும், பிரதீப்புக்கும் இடையே முட்டிக்கொண்டது.

போதாத குறைக்கு வாரத்தின் முதல் நாள் நாள் ப்ரோமோவில் கமலஹாசன் வந்து மற்றொரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதுவரைக்கும் பிக் பாஸ் சீசன்களில் 2 வைல்டு கார்டு என்ட்ரி தான் இருக்கும். ஆனால் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் இந்த முறை ஐந்து பேர் வர இருக்கிறார்கள். அதுவும் வரும் சனிக்கிழமை 8 மணிக்கு ஒரே நேரத்தில் வருகிறார்கள்.

கடந்த வாரம் போல இந்த வாரமும் 11 பேர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, கூல் சுரேஷ், மணி, மாயா, விஷ்ணு, வினுஷா, அக்ஷயா, நிக்சன், யுகேந்திரன், சரவண விக்ரம் ஆகியோர்தான் நாமினேட் செய்யப்பட்டு இருப்பது. வீட்டில் இந்த லிஸ்டில் பிரதீப் வெளியேற வாய்ப்பே இல்லை. அதேபோன்று மாயா இல்லை என்றால் அந்த வீட்டில் கண்டன்ட் இல்லை என்று ஆகிவிட்டது.

வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ஐந்து பேர் வர இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் வரும் வாரம் டபுள் எவிக்சன் நடைபெற இருக்கிறது. வினுஷா மற்றும் அக்ஷயா தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. பார்வையாளர்கள் சிலர் சரவண விக்ரம் வீட்டில் இருப்பது போல தெரியவே இல்லை. இதற்கு அவர் எலிமினேஷன் ஆகி பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிராக நடித்த குமரன் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

bb7-kamal-housemates

பிக் பாஸை தலைகீழாக புரட்டிப் போட வரும் 5 வைல்ட் கார்டு என்டரி.. மண்டைய பிச்சிக்க போகும் ஆண்டவர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு புதிதாக களமிறங்கும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் .

BB7

மீண்டும் கலவரமான பிக் பாஸ் வீடு.. சைக்கோவுடன் முட்டி மோதிய விஷ்ணு, அடுத்த ரெட் கார்டு ரெடி

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் போய்க்கொண்டிருக்கிறது. சும்மா எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்களே எப்போது தான் டாஸ்க் செய்வார்கள் என்று பார்வையாளர்கள் கடந்த வாரம் வரை கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இனி எங்களிடம் டாஸ்கே எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெற்றது.

இதன் விளைவாக கமலஹாசன் நேற்று, போட்டி கைகலப்பாக மாறும் பொழுது அதை உடனே நிறுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார். மேலும் விஜய் வர்மா நேற்று வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ஆக பூர்ணிமா தேர்வாகி இருக்கிறார். போதாத குறைக்கு இன்று ஓபன் நாமினேஷன் வேறு நடைபெற்று இருக்கிறது.

இந்த வாரத்தின் தலைவர் பூர்ணிமாவை அதிகம் வறாதவர்கள் என்ற லிஸ்டில் பிரதீப், நிக்ஸன், மணி, யுகேந்திரன், அனன்யா,ஜோவிகா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டின் கிளீனிங் வேலையை செய்வதற்காக டாஸ்க் வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டின் சார்பாக விஷ்ணுவும், ஸ்மால் பாஸ் வீட்டின் சார்பாக மணியும் கலந்து கொண்டார்கள்.

சேரில் உட்கார்ந்து கொண்டு கால்பந்து விளையாடி அதிகம் கோல் சேர்ப்பவர்கள் தான் வின்னர் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் வீட்டை சேர்ந்த விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால் டென்ஷன் ஆன நிக்சன் நடுவராக இருந்த பூர்ணிமாவை எதிர்த்து கேள்வி கேட்டதோடு ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் கேப்டன் டவுன் என கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சலசலப்பில் திடீரென விஷ்ணு விஜய் மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு இடையே மோதலாகிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கத்த ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே முதல் வாரத்தில் பிரதீப்பிடம் தவறுதலாக பேசிய விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்பட்டது தான் இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும் பொழுது நினைவுக்கு வருகிறது.

மேலும் இந்த வாரத்தின் ஓபன் நாமினேஷனில் பிரதீப், மணி மற்றும் மாயா அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே மணி மற்றும் ரவீனாவை வேறு வேறு வீட்டில் பிரித்துப் போட்டது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் நன்றாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BB7 22nd day

ஓபன் நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. தாய்க்கிழவியா, சைக்கோவா காலி செய்யப் போகும் பிக்பாஸ்

BB7 Open Nomination: கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 22 நாட்களை கடந்து இருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் உக்கிரமாக நடந்து கொண்டதன் காரணமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து திங்கட்கிழமை ஆன இன்று நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லோரும் பிக் பாஸ் தூண்டி விடுவதற்கு முன்பே அவர்களே சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வீடுகள் என்று ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சை இன்று போர்க்களமாகவே மாறிவிட்டது. இதில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் பிக் பாஸ்.

எப்போதுமே மற்ற சீசன்களில் எபிசோடுகளை கடந்த பிறகு தான் ஓபன் நாமினேஷன் நடத்தப்படும். ஆனால் இந்த சீசனில் நான்காவது வாரமே ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் இதை அறிவிப்பதற்கு முன்னரே போட்டியாளர்கள் யார் யாரை நாமினேட் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஐஷு, பிரதீப் ஆண்டனியை நாமினேட் செய்வது சுத்த வேஸ்ட் என சொல்லி இருக்கிறார்.

ஐஷு சொன்னது போல் இனி வரும் வாரங்களில் எத்தனை தடவை பிரதீப்பை டாமினேட் செய்யப்பட்டாலும் கண்டிப்பாக அவர் சேவ் ஆகிவிடுவார். பிரதீப் ஒவ்வொரு முறையும் சேவ் ஆகும்பொழுது மூன்றாவது சீசனில் கவின் சேவ் ஆகி வந்தது தான் ஞாபகம் வருகிறது பார்வையாளர்களுக்கு. இருந்தாலும் மனம் தளராது விசித்ரா மற்றும் வினுஷா போன்றவர்கள் இன்றைய ஓபன் நாமினேஷனில் பிரதீப்பை நாமினேட் செய்திருக்கிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் மணி இன்று அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அதிலும் ஐஷு மணியை நாமினேட் செய்யும் போது மணி பார்வையாளர்களை என்டர்டைன் செய்வது போல் தெரியவில்லை, அவர் ரவீனாவை என்டர்டைன் செய்வதில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.இதற்கு நிறைய பேர் அதுதான் உண்மை என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் ஐஷுவுக்கு மணி மீது இருக்கும் காண்டு தான் இப்படி சொல்லி இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த மூன்று வாரங்களாக ஏதோ ஒரு காரணங்களால் மாயா மீண்டும் மீண்டும் தப்பித்து வருகிறார். சளைக்காது போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த வாரத்திலும் மாயா அதிகப்போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். யுகேந்திரன் மாயா எப்போதுமே மாயையாக இருக்கிறார் என்று சொல்லி நாமினேட் செய்திருக்கிறார்.

BB7 promo

விஜய் வர்மாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்.. அப்போ ரெட் கார்டு கன்ஃபார்ம் தான் போல

BB 7 Red Card: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் இந்த வாரம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் யார் வெளியே போவார் என்பது தான் இந்த வாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த முறை ஆரம்பத்திலேயே கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். இரண்டு வீடுகள் அமைத்து சுவாரசியம் இல்லாதவர்களை அந்த வாரத்தின் தலைவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ரூல்ஸ் சொன்னதிலிருந்து மொத்த பிரச்சனையும் பற்றி கொண்டு விட்டது. ஆரம்பித்த 20 நாட்களிலும் சண்டை மற்றும் சச்சரவு தான் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை கடினமான டாஸ்க் எதுவுமே கொடுக்கப்படவில்லை என்று வெளியில் பேசப்பட்டது. அந்த குறையை தீர்த்து வைக்கும் வகையில் கடந்த வாரம் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆரம்பித்த போது இது ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய டாஸ்கில்லை என்று தான் தோன்றியது. ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் அதை ஒரு போர்க்களமாகவே மாற்றி விட்டார்கள்.

விஜய் வர்மா ஏற்கனவே முதல் வாரத்திலேயே தேவை இல்லாமல் பேசியதற்காக ஸ்ட்ரைக் வாங்கி இருந்தார். தற்போது நடந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் ரொம்பவும் கோபமாக நடந்து கொண்டதோடு உடலளவில் போட்டியாளர்களை தாக்கியது எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கமலஹாசன் எபிசோடில் கண்டிப்பாக அவர் இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடி மூன்றாவது ப்ரோமோவில் கமல் இதைப் பற்றி பேசியிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட கோபத்தை இதுபோன்று டாஸ்க்கில் காட்டக்கூடாது என சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு போட்டி எல்லையை மீறுகிறது என்று தெரிந்தால் உடனே அதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தும் இருக்கிறார். மேலும் விஜய் வர்மா செய்ததை பிரதிப் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் விதிகளின்படி உடல் அளவில் காயத்தை ஏற்படுத்தும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். இரண்டாவது சீசனில் இது போன்ற ஒரு டாஸ்க்கில் மகத், டானியை காயப்படுத்தி இருந்தார். அப்போது அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த சீசனில் விஜய் வர்மாக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோடில் இது உறுதியாக தெரிய வரும்.