BB7

பவாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் பிரபலம் இவரா!

பவா செல்லத்துரையை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்

bb7-promo-vijay-vishnu-new

மூஞ்ச ஒடச்சிடுவேன், அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்.. நாரதர் வேலையை சிறப்பாக செஞ்சி விட்ட பிக் பாஸ்

BB7 Promo: பிக் பாஸ் சீசன் 7 துவங்கி மூன்று வாரம் தான் ஆகிறது அதுக்குள்ள போட்டியாளர்கள் ஜெயிக்கணும்னு வெறித்தனமாக விளையாடுகின்றனர். இதனால் நிகழ்ச்சியும் நாளுக்கு நாள் பரபரப்பாகிறது. இன்று பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கும் சேர்ந்து ஒரு கேம் நடத்துகின்றனர். இந்த போட்டியில் வயது வித்தியாசம் பார்க்காமல் அடிதடியில் இறங்கி ரகளை செய்கின்றனர்.

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கொடுக்கப்பட்டு அதில் அதிக பாட்டில் எந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த பாட்டில்களை அடித்துக்கொண்டு இரு விட்டாரும் எடுத்து மறைத்து வைக்கின்றனர். இந்த விளையாட்டில் தான் விஜய்- விஷ்ணு இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

அதிலும் விஜய் தன்னுடைய நிஜ முகத்தை காட்டி நெஞ்ச நிமித்திக்கொண்டு விஷ்ணுவுடன் சண்டைக்குப் போகிறார், ஏற்கனவே இவர் வன்முறையாக பேசியதற்கு கமல் ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்தார். இதேபோன்று இன்னும் இரண்டு முறை வாங்கினால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஆண்டவர் வார்னிங் செய்தார்.

அப்படி இருந்தும் விஜய் கொஞ்சம் கூட தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்ளாமல் ரவுடி போல் மூஞ்சி மொகரைய உடைத்து விடுவேன் என்று விஷ்ணுவை சண்டைக்கு அழைக்கிறார். விட்டுருந்தா ரெண்டு பேருக்கும் கைகளப்பே ஏற்பட்டிருக்கும். ஆனால் சக போட்டியாளர்கள் தான் அவர்களை விலக்கி விட்டார்கள்.

‘மூஞ்சிய அடிச்சு ஒடச்சிடுறேன்னு சொல்றான். இந்த மூஞ்சி தான் எனக்கு சோறு போடுது’ என்று அமுல் பேபி விஷ்ணு தனியாக பேசி புலம்புகிறார். ஆனால் விஜய் இந்த வாரம் இரண்டாவது முறையாக கமலிடம் ஸ்ட்ரைக் கார்ட் வாங்குவது உறுதி. கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் விளையாடும் இவரை ஆண்டவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் எதிர்பாராத அதிரடி திருப்பத்துடன் தற்போது வெளியான இந்த ப்ரோமோவை பார்த்தால் இன்று தரமான சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகிறது. எப்போதுமே இரு வீட்டருக்கும் தனித்தனியாகவே போட்டிகளை நடத்தும் பிக் பாஸ் இந்த முறை இரண்டு பேருக்கும் ஒன்றாக போட்டியை வைத்து, கலவரம் ஏற்பட வேண்டும் என்று நாரத வேலையை சரியாக பார்த்துவிட்டார். பிக் பாஸ் பிளான் புரியாத விஜய் இதில் வசமாக சிக்கிக்கொண்டார்.

BB7 Nomination

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.. போனவாரம் மிஸ் ஆயிடுச்சு, இந்த வாரம் கண்டிப்பா ஸ்கெட்ச் உனக்குத்தான்

BB7 3rd Week Nomination List: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சீசனில் எப்போதுமே பரபரப்புக்கும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சீசனை தான் எதிர்பார்த்தேன் என்று பிக் பாஸே சொல்லும் அளவிற்கு போட்டியாளர்கள் கண்டன்டுக்கு மேல் கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

20 போட்டியாளர்களுடன் களம் கண்ட பிக் பாஸ் ஏழாவது சீசனில், முதல் எலிமினேஷன் ஆக அனன்யா ராவ் வெளியேறினார். மேலும் எழுத்தாளர் மற்றும் நடிகர் பவா செல்லதுரை தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருடைய வெளியேற்றத்தால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்துவிட்டது. இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் கமலஹாசன் போட்டியாளர்களை சிறப்பாக சம்பவம் செய்தார். ஸ்மால் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நடத்திய ஸ்டிரைக் பற்றி கமல் வறுத்தெடுத்து விட்டார். மேலும் மாயாவை ஆடியன்ஸ் உடன் சேர்ந்து கலாய்த்தது ரசிக்கும் அளவிற்கு இருந்தது. அதே நேரத்தில் வீட்டின் நிறைகள் மற்றும் குறைகளை தெள்ளத் தெளிவாக அலசி விட்டிருந்தார் ஆண்டவர்.

இன்று மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அதற்கு முன்பே காலையிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து இவர்கள் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும், இவர்களை யார் நாமினேஷன் செய்வார்கள் என பேசிக்கொண்டிருந்தார்கள். நாமினேஷன் பற்றி ஒருவருக்கொருவர் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்பது பிக் பாஸ் ரூலில் இருக்கிறது. இவர்கள் இருவரும் இப்போது அதையும் மீறி இருக்கிறார்கள்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, மணி, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா, ஐஷு ஆகியோர் இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக பிரதீப் முதலிலேயே சேவ் ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வயதானவர்களைத்தான் முதலில் எலிமினேட் செய்வார்கள் என்று இருந்த பிக் பாஸ் இலக்கணத்தையே விசித்ரா மாற்றி இருக்கிறார். கண்டிப்பாக விசித்திரா வெளியில் போக வாய்ப்பே இல்லை.

மாயா மற்றும் பூர்ணிமா சேவ் ஆகி, மணி மற்றும் ஐஷு இருவருக்குள் ஒருவர் வெளியேறுவது என்பது கனவிலும் நடக்காத விஷயம். இப்போது மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் இருப்பவர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். மாயா ஏற்கனவே கர்ணம் தப்பினால் மரணம் என்றுதான் இந்த வாரம் வீட்டிற்குள் இருக்கிறார். எனவே கண்டிப்பாக மாயா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

Bigg Boss 7

பலே திட்டத்துடன் நுழைந்திருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. விவரம் தெரியாமல் இன்னும் மிச்சர் தின்னும் அந்த 3 பேர்

பிக் பாஸ் கேம் புரியாமல் வீட்டிற்குள்ளேயே ஆடியன்ஸாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று போட்டியாளர்கள்

ravindar

ஜெயிலில் அனுபவித்த கஷ்டத்தை வாய் விட்டு கதறிய ரவீந்தர்.. இரண்டு பெரும் புள்ளிகளுடன் இருந்த சம்பவம்

Ravindar: தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கடந்த மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்து

ethirneechal-bigg-boss

பிக் பாஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த எதிர்நீச்சல்.. பத்த வச்சிட்டியே பரட்டை, ஜோவிகாக்கு எதிராக திரும்பும் பூகம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.