res sandlewood

தமிழ்நாட்டில் இருந்து, வந்துபோற கடைசி உயிர் என்னோட தான் இருக்கணும்.. பதைபதைக்க வைத்த ரெட் சாண்டல்வுட் டிரைலர் வீடியோ

Red Sandal Wood Movie Trailer: வரும் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ரெட் சாண்டில் வுட். ஆந்திராவில் கூலித்தொழிலாளியாக செல்லக்கூடிய தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாக, கைது செய்து அவர்களின் உயிர் போவதை குறித்த கதை அம்சம் கொண்ட படம் தான் ரெட் சாண்டில் வுட்.

இந்த படத்தை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது. எட்டு தோட்டாக்கள், ஜீவி, பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் வெற்றியுடன் மயூரி, கேஜிஎப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், எதிர்நீச்சல் மாரிமுத்து உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழகத்திலிருந்து ஆந்திரா செல்லும் கூலி தொழிலாளிகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செம்மரங்களை கடத்திய கும்பல்களின் பிடியில் சிக்கி தமிழர்களின் போராட்டத்தை காட்டி இருக்கிறது.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் கவின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு ரசிகர்கள் பலரும் நடிகர் வெற்றியின் அடுத்த வெற்றிப் படம் இதுதான் என்று அடித்து சொல்கின்றனர். அந்த அளவிற்கு சமீப காலமாகவே வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகும் தரமான படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ரெட் சாண்டில்வுட் படமும் போர் தொழில், குட் நைட் போன்ற படங்களின் வரிசையில் சற்றும் எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிரைலரை பார்த்த பிறகு ரெட் சாண்டில் வுட் படத்தை திரையில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

vijay-varisu

பல வருடம் கழித்து ஆண் குழந்தைக்கு அம்மாவான விஜய் பட நடிகை.. வைரலாகும் வித்தியாசமான பெயர்

இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர், தமிழ் சினிமாவில் இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார்.

Sushmita Sen

இங்க பருப்பு வேகாததால் ஒரே படத்தில் காணாமல் போன 5 நடிகைகள்.. மறக்க முடியுமா அந்த உலக அழகி சுஷ்மிதா சென்

உலக அழகி பட்டம் பெற்ற நடிகைகள் தமிழில் முதலில் நடித்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடலாம் என்ற சென்டிமென்ட் அப்போது இருந்தது.

Directors

50 லட்சம் போட்டு 500 லட்சம் வசூல் செய்த ஒரே படம்.. பாலச்சந்தர், பாரதிராஜாவுக்கு நிகராக வந்திருக்க வேண்டிய இயக்குனர்

ஒரே படத்தில் காதல், கலை, நகைச்சுவை, இசை, சென்டிமென்ட் என மொத்தத்தையும் இறக்கி அது மிகப்பெரிய அளவில் ஹிட்டும் அடித்திருக்கிறது இந்த இயக்குனருக்கு.

Sivaji Padmini

உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி.. சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணமா?

சிவாஜி – பத்மினி ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.

gowtham

அப்பா பக்கத்தில் நெருங்க கூட முடியாமல் போராடும் 5 வாரிசு நடிகர்கள்.. முட்டி மோதி தவிக்கும் கௌதம் கார்த்திக்

சில நடிகர்களுக்கு அவர்களுடைய அப்பாவின் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போராடிக் கொண்டு வருகிறார்கள்.