chandramukhi-trailer

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

vijay-cinemapettai3

சொந்த உறவுகளையே தூக்கி விடாத 5 உச்ச நட்சத்திரங்கள்.. வாய்ப்பு கொடுத்தும் நன்றியை மறந்த விஜய்யின் தம்பி

சில நடிகர்களுக்கு சொந்தக்காரர்கள் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் அவர்களை தூக்கி விடவில்லை.

goundamani

காமெடி கிங்காக கலக்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே மனுஷன்

பாட்டு வாத்தியாராக வேஷம் போட்டு நடிக்க வரும் சத்யராஜ் கவுண்டமணி உடன் சேர்ந்து வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்

chandramukhi-ragava-lawrence

ஆயுத பூஜையும் இல்ல, தீபாவளியும் இல்ல.. ரிலீஸ் தேதியை லாக் செய்த சந்திரமுகி 2

இதுவே இப்போது ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில் ரசிகர்கள் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

vadivelu-actor

பிரபல இயக்குனரால் துரத்தி அடிக்கப்பட்ட வடிவேலு.. ஓவர் பப்ளிசிட்டியால் மார்க்கெட் இழக்கும் பரிதாபம்

தன்னுடைய ஓவர் பப்ளிசிட்டியால் சமீப காலமாக இது போன்ற பிரச்சனையில் சிக்கி வருகிறார் வடிவேலு

மனோரமா நடிப்பில் பட்டையை கிளப்பிய 8 கேரக்டர்கள்.. வில்லத்தனத்திலும் முத்திரை பதித்த ஆச்சி

கோபி சாந்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய இவர், இன்று ஆட்சி மனோரமாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

rajinikanth

யானை இல்லை குதிரை என சூப்பர் ஸ்டார் நிரூபித்த படம்.. தொடர் தோல்விகளுக்கு பின் ரஜினியை தூக்கி நிறுத்திய இயக்குனர்

கடந்த 2003 ஆம் ஆண்டு ரஜினியின் சினிமா கேரியரே கேள்விக்குறியாகும் படி அவருக்கு ஒரு மிகப்பெரிய அடி விழுந்தது.

ruthran movie

காலைவாரி விட்ட ருத்ரன் வசூல்.. அடுத்து கல்லா கட்ட லாரன்ஸ் காத்திருக்கும் 3 முக்கிய படங்கள்

ருத்ரன் படம் மோசமான தோல்வி அடைந்த நிலையில் லாரன்ஸ் கைவசம் அடுத்ததாக மூன்று படங்கள் லையன் அப்பில் உள்ளது.

Dhanush- Ponniyin Selvan

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பத்து 2ம் பாகம் படங்கள்.. புதுப்பேட்டை முதல் பொன்னியின் செல்வன் வரை

சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிரவிட்ட பத்து படங்கள்.

ஆந்திராவில் 50 தியேட்டரில் 100 நாள் ஓடிய தமிழ் படம்.. இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை.!

இந்த மாதிரி ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோக்களாலும் கொடுக்க முடியவில்லை. இவர் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் ஓடி பெரிய சாதனை படைத்திருக்கிறது.