Tamil writer and actor vela Ramamoorthy 5 hit films in tamil: இன்றைய தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முன்னணியில் இருப்பவர் வேல ராமமூர்த்தி ஆவார் இவர் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை முதலிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கென தமிழ்நாட்டில் ரசிகர் பட்டாளங்கள் பல உண்டு. சமூகத்தில் நடக்கும் கொடுமைகளையும் அவலங்களையும் தீயன பறக்கும் தன் எழுத்துக்களால் ரசிகர்களின் சிந்தனையை தட்டியவர்.
எழுத்தாளராக அடையாளம் கொண்டிருந்த வேல ராமமூர்த்தி அவர்கள் ஆயுதம் செய்வோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகனாக அறிமுகமானார்
மதயானை கூட்டம்: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் வெளிவந்த மதயானை கூட்டத்தின் மூலம் வேல ராமமூர்த்தி அவர்கள் மிகவும் பிரபலமானார். கிராமத்து பின்னணியை கொண்ட கதைக்களத்தில் தங்கைக்கு ஆதரவு தரும் மூர்க்கத்தனமான அண்ணனாக மிரட்டி இருந்தார் வேல ராமமூர்த்தி.
Also read : வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்
கிடாரி: நிஜ வாழ்க்கையில் அநியாயத்தை கண்டு பொங்கும் வேல ராமமூர்த்தி அவர்கள், இந்த கிடாரி படத்திற்காக தனது கேரக்டரை அப்படியே எதிர்மறையாக மாற்றி கொம்பையா பாண்டியனாக வாழ்ந்திருந்தார் எனலாம். நண்பனுக்கு துரோகி ஆகி அவரது மகனையே அடிமையாக்கி கிடாரியில் தனது குருரத்தை கண்களிலேயே வெளிப்படுத்தி இருந்தார் கொம்பையா பாண்டியன் என்னும் வேலராமமூர்த்தி.
கொம்பன்: கிராமத்து கதையை கையில் எடுத்து வெற்றி பெறும் எம் முத்தையாவின் இயக்கத்தில் உருவான கொம்பன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்தார் வேல ராமமூர்த்தி. அநீதியை தட்டி கேட்கும் நாயகனுக்கு ஆதரவாக குணச்சித்திர நடிகராக இப்படத்தில் ஸ்கோர் செய்திருந்தார் வேல ராமமூர்த்தி.
சேதுபதி: வேல ராமமூர்த்தியின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டது விஜய் சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம். வாத்தியாராக நடித்த வேல ராமமூர்த்தி இயல்பான நடிப்பினால் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டி இருந்தார். கௌரவத்திற்காகவும் மகளுக்காகவும் எதையும் செய்யத் துணியும் தந்தையாக வில்லன் பாத்திரத்திற்கு அழுத்தத்தை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார் வேல ராமமூர்த்தி.
நம்ம வீட்டு பிள்ளை: குடும்ப உறவுகள் தான் மனிதனின் பலம் என உறவை பேணுவதை கருவாகக் கொண்ட பாரதிராஜா, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பாசம் காட்ட மறந்தவர் ஆக நடித்த வேல ராமமூர்த்தி இறுதியில் பாசப்பிணைப்பில் நாயகனுடன் ஒன்றிணைந்து சபாஷ் போட செய்திருந்தார்.
இன்று வரை தினமும் குரல் பயிற்சி எடுத்து வரும் வேல ராமமூர்த்தி அவர்கள் எதிர் நீச்சல் தொடரில் மறைந்த மாரி நடிகர் மாரிமுத்துவுக்கு பதிலாக ஆதி குணசேகரம் வேடம் ஏற்று ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
Also read : எதிர் நீச்சல் குணசேகரன் கொடுக்கும் திருட்டு பட்டம்.. ராஜமவுலி, தனுஷ் என் கதையை திருடிட்டாங்க!