குற்றம் சுமத்தப்பட்ட கேப்ரில்லா.. 15 நாட்கள் ரிமாண்ட், மாமியார் கையில் சிக்கி ஆதாரம்!

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கேப்ரில்லா நடிக்கும் காவியா கதாபாத்திரம் ஆனது கொஞ்சம் துணிச்சல் அதிகமாக உள்ள கேரக்டர் தான்.

நடு ரோட்டில் போக்குவரத்து காவலர் ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அதை சகித்துக் கொள்ள முடியாத காவியா அரசு அதிகாரி என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் பளார் என்று கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

இதனால் அரசு அதிகாரியை அவமானப்படுத்திய குற்றத்திற்காக காவியா மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸ் கைது செய்கிறது. அதன்பின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காவியா, போக்குவரத்து போலீசை அடித்ததை ஒத்துக்கொண்டார்.

இதனால் பொது இடத்தில் அரசு அதிகாரியை அவமானப் படுத்தியதால் காவியாவை குற்றவாளியாகக் கருதி, 15 நாட்கள் ரிமாண்டில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த சமயம் காவியாவின் மாமியார் எதற்காக காவியா போலீசை அடித்தார் என்பதற்கான ஆதாரத்தை காட்டுகிறார். அந்த வீடியோவை பார்த்த நீதிபதி காவியாவின் துணிச்சலை பாராட்டியதுடன் தவறு செய்த போக்குவரத்து காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து தண்டனை வழங்கினார்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட மருமகள் காவியாவை ஆதாரத்துடன் அவர் குற்றமற்றவர் என மாமியார் நிரூபித்திருக்கும் உணர்ச்சிபூர்வமான தருணம் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடந்திருக்கிறது.

ஏற்கனவே பார்த்திபனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளும் காவியா, இவ்வளவு நல்ல மாமியாரையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு எப்படி விலகுவது என தெரியாமல் கலங்குகிறார்.