விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதி, கண்ணம்மாவிடம் விவாகரத்து பெறுவதற்காக ஆறு மாதம் கண்ணம்மா வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே ஒரே வீட்டில் இவர்கள் இருப்பதால் அடிக்கடி சண்டை கலந்த ரொமான்ஸ் காட்சிகள் அவ்வப்போது பாரதிகண்ணம்மா சீரியலில் காண்பிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மாவின் சந்தன சோப்பினால் மயங்கி அந்த வாசனையுடன் ஒன்றித்து விட்டார்.
இதனால் அவருக்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்த நியாபகம் வந்துவிட்டது. அதன் விளைவாக இன்று கண்ணம்மாவின் மேல் இருக்கும் கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில் மது அருந்திவிட்டு உண்மையான குடிகாரன் போல் கண்ணம்மாவை ரவுண்ட் கட்டினார்.
அத்துடன் குடிகாரன் செய்வதை எல்லாம் பிசிறு தட்டாமல் செய்ததுடன் இறுதியில் வாந்தி எடுத்து, அதனை கண்ணம்மா துடைத்துவிட சீரியல் முழுவதும் ரொமான்ஸ் ட்ராக்கை சீரியலின் இயக்குனர் கச்சிதமாக ஓடிவிட்டார்.
இவ்வாறு பிரிந்திருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்வதற்கான அத்தனை சாத்தியமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எனவே கூடிய விரைவில் கண்ணம்மாவின் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதை பாரதி புரிந்துகொண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ துவங்கி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கேற்றார்போல் வில்லியான வெண்பாவும் பாரதிக்கு ஏற்றிவிட இல்லாத காரணத்தினால், பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி நிச்சயம் கண்ணம்மாவை புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.