Actress Rekha Nair support Mansoor ali khan and Trisha controversy: லோகேஷின் லியோ பட விழாவில் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. நான் தவறாக பேசவில்லை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அறிவித்தார் மன்சூர்அலிகான். பல தரப்பிலும் கண்டனங்கள் வலுத்த வண்ணம் இருந்ததை அடுத்து மன்சூர்அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். இப்பிரச்சினை இத்தோடு முற்றுப்பெற்று விட்டது என்று இருந்த நிலையில் நடிகை ஒருவர் இதனை மீண்டும் கையில் எடுத்து உள்ளார்.
இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர் சர்ச்சைகளுக்கு அஞ்சாத இவர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் பேசியதில் என்ன தப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவர் சினிமாடிக் ஆக பேசி உள்ளார் என்றும். ரஜினி, கமல் எல்லோரும் இப்படி பேசி இருக்கிறார்கள் என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் ரேகாநாயர், இப்பிரச்சினையை லோகேஷ் த்ரிஷாவிடம் பேசியோ அல்லது மன்சூர் அலிகானை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தோ முடித்திருக்கலாம் என்றும். சமூக வலைதளங்களில் இவ்வளவு பெரிதாக்க வேண்டாம் என்று சாடியுள்ளார்.
“இன்று சோசியல் மீடியாவில் எதை சொன்னால் வைரலாகும் என்பதை தெரிந்து கொண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள்” என்ற கருத்தை நிருபரிடம் கூறிக் கொண்டே இவரும் வேண்டுமென்றே வைரல் ஆக்குவதற்காக சர்ச்சையை மீண்டும் கிளப்புகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மன்சூர் அலிகானுக்கு வக்காலத்து வாங்கவில்லை என்றும், விவகாரத்தில் திரிஷாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றும் கூறியுள்ளார். மன்சூர் பக்கமா அல்லது திரிஷா பக்கமா யாருக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஊடகங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று ஊடகத்தில் பேட்டி கொடுக்கிறார்.சமூக ஆர்வலர்கள் பலரும் இன்னும் இந்த பிரச்சனை முடியலையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.