விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன் நடக்க உள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த யாரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வில்லை. மேலும் இந்த வாரம் முழுக்க காரசாரமான பல சண்டைகள் அரங்கேறியது.
கடந்த வார நாமினேஷனில் அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் விக்ரமன் மற்றும் சிவின் தான். ஆனால் அதிகமாக தனலட்சுமி வெளியேறுவார் என்று பலரும் கருதி வந்தனர். இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
அதாவது கடந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றவர் தாமரை. தனது வெளந்தியான குணத்தாலும், போட்டியாளர்களுக்கு சுவையாக சமைத்துக் கொடுத்ததனாலும் நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாமரையால் தாக்குபிடிக்க முடிந்தது.
தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தாமரை இடத்தை பிடிக்க நினைத்தவர் சாந்தி மாஸ்டர். அதாவது தாமரைப் போல இவரும் சமையல் செய்து போட்டியாளர்களுக்கு கொடுத்து வந்தார். ஆனால் எந்த போட்டியிலும் இவர் ஈடுபாடுடன் கலந்து கொண்டது போல தெரியவில்லை.
நேற்று நடந்த டாஸ்க்கில் தனக்கு இரண்டாவது இடம் தான் வேண்டும் என உறுதியாக இருந்தார். அதேபோல் மற்ற ஹவுஸ் மேட்ஸும் இவரை இரண்டாவது இடத்திற்கு தேர்வு செய்தனர். இந்த சூழலில் தற்போது அவருக்கு ஆப் அடிக்கும் விதமாக ரசிகர்கள் விருப்பப்படி சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாந்தி உட்பட இவரது எலிமினேஷன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சீசனில் சமையல் தெரிந்தவர்கள் மிகக் குறைவு தான். சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றதால் இனி சமையலால் நிறைய பிரச்சனைகள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்.