விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இத்தொடரில் கோபி, ராதிகாவுடன் பழகுவது எப்போது கோபியின் வீட்டுக்கு தெரியும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.
பலமுறை கோபியை அவரது அப்பா எச்சரித்தும் ராதிகாவுடன் பழகுவதை கோபி நிறுத்தினபாடு இல்லை. ராதிகாவின் மகள் மயூ கோபியின் வீட்டிற்கு வந்த போது என் அம்மாவுக்கும், கோபி அங்கிளுக்கும் திருமணம் ஆக போகிறது என கோபியின் அப்பா ராமமூர்த்தி இடம் சொன்னாள்.
இதை கேட்டு அதிர்ந்து போனா ராமமூர்த்தி இனிமேல் இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லவேண்டும் என முடிவெடுக்கிறார். இந்த விஷயம் கோபியின் அம்மாவுக்கு தெரிந்தால் உடல்நிலைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என முதலில் பயப்படுகிறார்.
அதன்பிறகு கோபி இடமே நேராகப் போய் இனிமே உன் வேஷத்தைக் கலைக்க போறேன் எல்லோரிடமும் இந்த உண்மையை சொல்ல போறேன் என கோபமாக மாடியிலிருந்து இறங்குகிறார். அப்போது மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்துவிடுகிறார்.
எல்லோரும் ராமமூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். அவருக்கு பிபி அதிகமானதால் பக்கவாதம் வந்து பேச முடியாமல் போய் விட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ராமமூர்த்திக்கு ஒரு பக்கம் கை காலும் வேலை செய்யாமல் போய் விடுகிறது.
இதனால் குடும்பமே வருத்தத்தில் இருந்தாலும் கோபி சந்தோஷமாகத் தான் இருக்கிறார். தனக்கு இருந்த ஒரு பிரச்சனையும் இப்போது இல்லை என்று நினைத்து இனிமேல் ராதிகாவுடன் பழகினால் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் உள்ளார் கோபி. பையனுக்கே கல்யாணம் பண்ணியாச்சு 50 வயசுல பொம்பள சோக்கு கேக்குதா கோபி என்ன ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.