விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் செய்த பாக்கியலட்சுமி பிரபலம்.. தளபதி செய்த செயல்

இந்த வயதிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும், எனர்ஜியாகவும் இருக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவரின் இளமை ரகசியம் தான் தற்போது வரை பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. அதேபோல் விஜய் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க பலர் காத்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் படத்தில் நடிக்க தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காத என பல முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகர்கள் வரை ஏங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு இளம் நடிகருக்கு விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போன சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அந்த நடிகர் வேறு யாருமல்ல விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வரும் விஜே விஷால் தான். இவர் முன்னதாக விஜேவாக பணியாற்றி தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். ஆனால் சீரியல் வாய்ப்பிற்கு முன்பே விஷாலுக்கு பட வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் தான் விஜே விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கல்லூரி மாணவர்களில் ஒருவராக விஜே விஷால் நடிக்க தேர்வாகி இருந்தார். திட்டமிட்டபடி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் திடீரென விஷாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாம்.

இருப்பினும் விஜய் படம் என்பதால் கிடைத்த வாய்ப்பை தவறவிட விரும்பாத விஷால் தான் தொடர்ந்து நடிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்த செய்தி அறிந்த விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை சந்தித்து வாய்ப்பு எப்போதும் வேண்டுமானாலும் கிடைக்கும். முதலில் உடம்பு முக்கியம் அதை கவனித்து கொள் என கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தாராம்.

தளபதி விஜய்யுடன் நடிக்க அனைவரும் ஏங்கி வரும் நிலையில் நமக்கு கிடைத்த வாய்ப்பு இப்படி பறிபோய்விட்டதே என கவலையில் விஷால் அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் கூட தளபதி விஜய் விஜே விஷாலுக்கு போன் செய்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தாராம். விஜய்யின் இந்த செயலால் விஷால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவங்களை எல்லாம் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.