பாரதிகண்ணம்மா தொடரில் அருண், ரோஷினி இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரின் ஆரம்ப எபிசோடுகளில் இவர்களது காதல் காட்சிகள் எல்லோரும் ரசிக்கும் படியும், செம ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அருண், ரோஷினி ஜோடிகாகவே பாரதிகண்ணம்மா தொடரை ஏராளமான ரசிகர்கள் பார்த்தார்கள். இதனால் பாரதிகண்ணம்மா தொடர் எப்போதும் டிஆர்பி யில் முதலில் இருக்கும்.
தற்போது ரோஷினி பட வாய்ப்புகள் கிடைத்ததால் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிவிட்டார். கண்ணம்மா கதாபாத்திரத்துக்கு ரோஷினி மட்டுமே பொருத்தமாக இருப்பார். ரோஹினியின் கண்களே பேசும், அவருடைய பல்வரிசை அழகாக இருக்கும், அவரைப் போல் யாராலும் நடிக்க முடியாது என கண்ணம்மா ரசிகர்கள் கூறுகிறார்கள். ரோஷினி இல்லாத பாரதிகண்ணம்மா சீரியலை பார்க்க மறுக்கிறார்கள்.
பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் ஆரம்ப காலங்களில் குறும் படங்களில் நடித்து பின்பு மேயாதமான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு 2019 இருந்து பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடரின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். அருண் நேற்று நவம்பர் 30-ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இவருக்கு ஜோடியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் உம் நேற்று பிறந்த நாள் கொண்டாடி உள்ளார். சென்ற ஆண்டு பிறந்தநாளை இருவரும் பாரதிகண்ணம்மா செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இவர்கள் இருவரது பிறந்த நாளும் ஒரே நாள் வரும் அளவுக்கு இவர்களது கெமிஸ்ட்ரி அந்த அளவுக்கு உற்று போகிறது.

அருண் 1991 ஆம் ஆண்டு பிறந்துள்ளார், ரோஷினி 1992 ல் பிறந்துள்ளார். அருண் நேற்று பிறந்த நாளன்று இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்தார். இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.