டாஸ்கில் அலட்சியம், விதி மீறல்.. இன்றைய பிக்பாஸில் கொதித்துப்போய் எச்சரித்த கமல்

பிக்பாஸ் ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போல் ஆறவிட்டு சூடேறாமல், ஆரம்பித்தில் இருந்தே சூட்டை கிளப்பி கொண்டிருக்கிறது இந்த சீசன். இந்த சீசனை ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக கொண்டு போய் கொண்டிருப்பவர்கள் அசீம் மற்றும் தனலட்சுமி தான் .

இந்த சீசனில் முதலில் எலிமினேட் ஆனவர் ஜி பி முத்து தான். இவர் தானாக முன் வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து டான்சர் சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் ஆகியோர் இருந்தனர். இதில் செரினாவுக்கு குறைந்த அளவில் ஓட்டுக்கள் வந்திருப்பதால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுகிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கமலஹாசன் போட்டியாளர்களோடு கலந்துரையாடினார். போன வாரம் கமல் தனலட்சுமிக்கு ஆதரவாக பேசி அசீமை வறுத்தெடுத்தார்.அசீமின் நடவடிக்கையில் இந்த வாரம் நிறையவே மாற்றம் இருந்தது. கமல் ஆதரவாக பேசியதால் என்னவோ இந்த வாரம் தனலட்சுமி கொஞ்சம் வீட்டில் ஓவராகவே சண்டை இழுத்து கொண்டிருந்தார்.

இதை கமல் தட்டி கேட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நேற்று கமலிடம் தனலட்சுமி
வசமாக சிக்கி கொண்டார். தனலட்சுமியை தனது ஸ்டைலில் வெளுத்து கட்டினார். மேலும் தனலட்சுமியிடம் மற்ற போட்டியாளர்கள் பேசுவதை தவிர்ப்பதற்கான காரணமே அவருடைய கோபம் தான் என்று கூறி அவருக்கு அறிவுரையும் கூறினார்.

இதற்கிடையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகிவிட்டது. இதில் கமல் மொத்த ஹவுஸ்மேட்சிடமும் கொஞ்சம் கோபமாகவே பேசியுள்ளார். சரியான நேரத்தில் டாஸ்க் செய்ய வராமல் இருப்பது, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதிக் காட்டுவது என விதிமுறைகளை மீறினால் நானே ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி விடுவேன் என எச்சரித்துள்ளார்.

இந்த ப்ரோமோவினால் இன்றைய எபிசோடின் மீது மக்களுக்கு நிறையவே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. மேலும் கடந்த வாரம் செரினா கீழே விழுந்து அடிபட்ட போட்ட போது, உயிர் போவது போல் அவர் போட்ட சீனால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தனர். செரினா வெளியேறுவதை பார்க்கவும் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கின்றனர்.