20 வருடத்திற்கு பின் ரீஎன்ட்ரி.. பிரசன்னாவுடன் இணையப் போகும் ஆண்ட்டி நடிகை

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. இதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு கண்ட நாள் முதல், சீனாதானா001, அஞ்சாதே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரசன்னா புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.

பிரசன்னாவின் முதல் படமான பைவ் ஸ்டார் படத்தை சுசி கணேசன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரசன்னாவுடன் 4 பேர் புதிதாக அறிமுகமாகி இருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை கனிகா. அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் கனிகா.

2002ல் வெளியான பைவ் ஸ்டார் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்தது. 5 ஸ்டார் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, கனிகா இருவரும் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளார்கள். இவர்கள் இருவரும் வெப்சீரிஸில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். இந்த இணைய தொடரை பாலாஜி மோகன் தயாரிக்கிறார்.

நடிகை கனிகா பிரசன்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பிரசன்னாவுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை நான் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.