இந்த நாலு பேருக்கு கடைசி படமாக அமைந்த இந்தியன் 2.. ரஜினி, கமலுடன் முடிந்து போன குணசேகரனின் சகாப்தம்

Indian 2 Movie: ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து, லைக்கா- ஷங்கர் இடையே ஆன மோதல் என்று இந்தப் படத்திற்கு நிறைய சிக்கல்கள் இருந்தது.

அதையெல்லாம் சமாளித்து ஒரு வழியாக படத்தை முடித்து விட்டனர். இருப்பினும் இந்த படம் தான் நான்கு பழம் பெரும் நடிகர்களின் கடைசி படமாக மாறிவிட்டது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி கேரக்டரில் நடித்த நெடுமுடி வேணு, இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் அக்டோபர் 2021ல் மரணமடைந்தார்.

மேலும் சமூக கருத்துக்கள் நிறைந்த காமெடிகளுக்கு பெயர் போனவர் தான் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் நிறைய படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக கமலுடன் இந்தியன் 2 படத்தில் தான் இணைந்தார். இது விவேக்கின் நீண்ட நாள் கனவு, அது நனவானது. என்ன துரதிஷ்டமோ! விவேக் திடீரென்று கடந்த 2021ல் காலமானார்.

அதைப்போல் கமலின் இளம் வயதில் இருந்தே நெருங்கிய நண்பரான நடிகரும் இயக்குனருமான மனோபாலா இந்தியன் 2ல் நடித்திருக்கிறார். இதை நினைத்து அவர் பல பேட்டிகளில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இவரும் உடல் நலக்குறைவால் திடீரென்று காலமானார்.

இவர்களைத் தொடர்ந்து சின்னத்திரையில் குணசேகரன் ஆக கொடிகட்டி பறந்த மாரிமுத்துவிற்கு இந்தியன் 2 தான் கடைசி படமாகி விட்டது. இவர் இயக்குனராக ஒரு சில படங்களை எடுத்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் க்கல் நையாண்டி நிறைந்த தன்னுடைய பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் செப்டம்பர் 8ம் தேதி திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்திலும் மாரிமுத்து இணைந்து நடித்திருந்தார். இவ்வாறு ரஜினி, கமலுடன் மாரிமுத்துவின் சினிமா சகாப்தம் முடிந்து  விட்டதுதான் பெரும் சோகம்.

இந்த நான்கு பேருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நடிகர்களின் கேரக்டர்களை படத்தில் இருந்து நீக்கி விடாமல் சங்கர் அதை தக்கவைத்து கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் சங்கரை வெகுவாக பாராட்டுகின்றனர். மேலும் இந்தியன் 2 வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகிறது, அதன் தொடர்ச்சியாக இந்தியன் 3-யை 2025ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →