முடியாது என மறுத்த கார்த்தி.. பிரசன்னாவை நடிக்கச் செய்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

கார்த்தி நடிகராவதற்கு முன்பே இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கார்த்தி உதவி இயக்குனராக இருந்த போதிலேயே ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. அதில் ஒன்று தான் பிரசன்னாவின் மிகப்பெரிய ஹிட் படம்.

அமெரிக்காவில் இருந்து படித்துவிட்டு திரும்பிய கார்த்தி முதலில் சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டு இருக்கிறார். இதனால் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இணைந்து இருக்கிறார். அவருக்கு அப்போதே ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது, ஆனால் கார்த்தி அதை மறுத்து விட்டார்.

மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்த பிரியா இயக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிப்பில் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘கண்ட நாள் முதல்’. இது ஒரு காதல் கலந்த காமெடி திரைப்படம். இந்த படத்தில் முதலில் கார்த்தியிடம் தான் கதாநாயகனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள், ஆனால் கார்த்தி மறுத்து விட்டார்.

‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் பிரசன்னா கதாநாயகனாக நடித்தார். இவருடன் லைலா, ரேவதி, ரெஜினா கேசன்ட்ரா, லட்சுமி, கார்த்திக் குமார், தேவதர்ஷினி நடித்திருந்தனர். பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான பிரசன்னாவுக்கு கண்ட நாள் முதல் திரைப்படம் தான் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்று சொல்லலாம்.

இந்த படத்தை எல்லாம் ஒப்புக்கொள்ளாத கார்த்தி 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திற்கும் கார்த்தி முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு இயக்குனர் அமீர், நடிகர்கள் சூர்யா, சிவகுமார் கார்த்தியிடம் பலமுறை பேசி இந்த படத்தில் நடிக்க வைத்தனர். இந்த பருத்திவீரன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

கார்த்திக்கு பருத்திவீரன் படம் ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்தது. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார். ஒரு வேளை கார்த்திக்கு கண்ட நாள் முதல் படம் அறிமுகப்படமாக அமைந்து இருந்தால் அவருடைய சினிமா வாழ்க்கை இந்த அளவுக்கு கிளிக் ஆகி இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் கண்ட நாள் முதல் பிரசன்னா நடிப்புக்கு தான் செட் ஆகி இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.