வெண்ணிலாவிடம் குழந்தை மீது சத்தியம் செய்யும் காவிரி.. வெளியே வரப்போகும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், யமுனா தான் விஜய் இருக்கும் இடத்தை போலீஸிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்று நவீனுக்கும் தெரிந்து விட்டது. உடனே வீட்டுக்கு வந்த நவின், யமுனாவிடம் சண்டை போடுகிறார். அதற்கு யமுனா, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் நவீனையும் காவிரியும் பற்றி தவறாக பேசி விடுகிறார்.

இதனால் கோபப்பட்ட நவீன், உன்னை இப்பொழுது வரை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நான் நினைத்தால் இப்பொழுதே உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும். ஆனால் ஏற்கனவே காவிரி, விஜய் நினைத்து கஷ்டத்தில் இருக்கிறார். தற்போது நீயும் அங்க போய்விட்டால் காவேரியை இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்துவாய் என்பதற்காக தான் உன்னை இந்த வீட்டில் வைத்திருக்கிறேன்.

விஜய் வெளியே வந்து எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு காவேரி உடன் சந்தோஷமாக வாழ ஆரம்பித்த உடன் உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று எச்சரிக்கை பண்ணி போய் விடுகிறார். அடுத்ததாக வெண்ணிலாவின் மாமா இருக்கும் அட்ரஸை தெரிந்து கொண்ட குமரன் நேரடியாக அவரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லும்படி கேட்டு கூட்டிட்டு வருகிறேன் என்று காவேரி மற்றும் நவீன் இடம் சொல்கிறார்.

அதன்படி குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஒரு கல்யாண விஷயமாக போகிறேன் என்று சொல்லி கங்காவிடம் மட்டும் உண்மையை கூறிவிட்டு குமரன் வெண்ணிலாவின் மாமாவை தேடி போய் விடுகிறார். போனதும் அங்கே விசாரித்து பார்த்ததில் வெண்ணிலா ஆஸ்பத்திரியில் அவ்வப்பொழுது கண்விழித்து பார்ப்பதாக ஒருவர் மூலம் குமரன் தெரிந்து கொண்டார்.

உடனே இந்த விஷயத்தை குமரன், காவிரிக்கு போன் பண்ணி ஆஸ்பத்திரியில் இருக்கும் வெண்ணிலாவே பார்த்து பேசு என்று சொல்லி அனுப்புகிறார். உடனே வெண்ணிலாவும் ஆஸ்பத்திரிக்கு போகிறார். அங்கே போனதும் வெண்ணிலா கண் விழிக்கும் நேரத்தில் காவிரி நடந்த விஷயத்தை போலீஸிடம் வந்து சொல்லி விஜய் காப்பாற்று என்று வெண்ணிலாவிடம் கேட்கிறார்.

அதற்கு வெண்ணிலா நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீ விஜய் விட்டுப் போக வேண்டும் என சொல்கிறார். உடனே காவிரி இந்த முறை நிச்சயம் நீ எனக்கு உதவி செய்தால் நான் விஜய விட்டு போய்விடுகிறேன் என வயிற்றில் இருக்கும் குழந்தை மீது சத்தியம் என்று காவேரி சொல்கிறார். அப்பொழுது தான் வெண்ணிலாவுக்கு புரிகிறது காவேரி விஜயும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் தான் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டார். ஆனாலும் விஜய் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார் என காவேரியின் நல்ல மனசை புரிந்து கொண்டு காவிரியும் விஜய்யும் ஒன்றாக சேர்த்து விட்டு வெண்ணிலா ஊரை விட்டு கிளம்பப் போகிறார்.