டாக்டர், டான் வரிசையில் இணைந்த மாவீரன்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Maaveeran box office collection: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மாவீரன் திரைப்படம் பலதரப்பட்ட சினிமா ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இரண்டு விருதுகளை வென்ற மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் அதிதி ஷங்கர், மிஸ்கின், சரிதா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்காக குரல் கொடுத்திருப்பது படத்தில் மற்றும் ஒரு பிளஸ் ஆக இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு இதற்கு முந்தைய படமான பிரின்ஸ் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இனி சிவகார்த்திகேயன் அவ்வளவுதான் என சினிமா உலகம் பேசும் அளவிற்கு இந்த தோல்வி அமைந்தது. மேலும் அவருக்கு கடன் பிரச்சனை இருப்பதாகவும், நிறைய சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கூட அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் மாவீரன் திரைப்படத்தின் மூலம் சிவா யாரும் எதிர்பார்க்காத கம்பேக்கை கொடுத்திருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி சிவகார்த்திகேயன் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆன இந்த படம் முதல் நாளில் 7. 61 கோடி வசூலித்தது. அதைத் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் முதல் நாளிலேயே இந்த படத்திற்கு கிடைத்ததால் அடுத்த நாளே படத்தின் வசூல் 9.34 கோடியானது.

நேற்றைய தினம் மாவீரன் திரையிட்ட, திரையரங்குகளில் எல்லாம் பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் அலைமோதியது. எந்த பக்கம் பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான் இந்த படத்திற்கு இருந்தன. இந்நிலையில் நேற்றைய ஒரு நாள் வசூல் மட்டும் 10.57 கோடி என சொல்லப்படுகிறது. மாவீரன் ரிலீசான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 27 கோடி வசூலித்திருக்கிறது . உலக அளவில் இது 40 கோடி என சொல்லப்படுகிறது.

இந்த வாரத்திலேயே இந்த வசூல் நிலவரம் 50 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 100 கோடி வசூல் லிஸ்டில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடி வசூலை எட்டியது.

அதேபோன்று இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் உலக அளவில் 113 கோடி வசூலித்திருக்கிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் வரிசையில் மாவீரனும் இணையும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அயலான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 21 வது படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.