கோபியை காப்பாற்ற உண்மையை கண்டுபிடித்த பாக்கியா.. சிக்கிக் கொள்ளும் சுதாகர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை விசாரிப்பதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போன போலீஸ், இனியா எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு கோபி எதுவும் பதில் சொல்லாததால் போலீஸ், கோபியை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு இனியாவிற்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி கோபி தன் மீது பழியை போடும் விதமாக நான்தான் நித்தேஷை கொலை பண்ணினேன் என்று சொல்லிவிடுகிறார்.

இந்த விஷயம் பத்திரிக்கை மூலம் வெளிவந்ததால் பாக்கியா இனியாவிற்கு தெரிந்து விட்டது. உடனே இனியா, நான் செஞ்ச தப்புக்கு எதற்காக அப்பா தண்டனை அனுபவிக்க வேண்டும். நான் இப்பொழுதே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எல்லாம் உண்மையும் சொல்லிவிடுகிறேன் என கிளம்பினார். ஆனால் பாக்கியம் இனியாவை தடுத்து சமாதானப்படுத்துகிறார்.

அடுத்ததாக சுதாகர், போலீசை சந்தித்து எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. என் பையன் இறந்ததற்கு இனியாவின் குடும்பம் தான் காரணம். அதனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எல்லோரையும் ஜெயிலுக்கு அனுப்பி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியா, இனியாவிடம் நடந்த விஷயத்தை கேட்கும் பொழுது சுதாகர் தான் அங்கே உன்னை வர சொல்லி இருக்கிறார். ஆனால் அப்படி இருக்கும் பொழுது அங்கே சுதாகர் இல்லாமல் நித்தீஷ் ஏன் இருக்க வேண்டும். இதில் ஏதோ ஒரு மர்மம் அடங்கி இருக்கிறது என்று பாக்கியம், பிள்ளைகளிடம் சொல்கிறார்.

அந்த வகையில் ரெஸ்டாரண்டுக்கு பக்கத்தில் இருக்கும் பழனிச்சாமியின் காபி கடையில் சிசிடிவி கேமரா இருக்கும். அதை பார்த்தால் உண்மையை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார். உடனே எழில், நான் அந்த சிசிடிவி கேமராவை வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்புகிறார்.

அந்த வகையில் திரும்பி வந்த எழில், சிசிடிவி கேமரா காலையில் கிடைத்துவிடும் என்று சொல்லி கொலை பழியை அப்பா ஏற்றுக்கொண்ட விஷயத்தையும் சொல்கிறார். இதனால் பாக்கியம் மற்றும் இனியா ரொம்பவே பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக கோபியை சந்தித்து பேசலாம் என்று பாக்கியா செழியன் எழில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள்.

அப்படி பேசும் பொழுது கோபி சொன்னது என்னவென்றால் இனியாவை தேடி நம் வீட்டுக்கு போலீஸ் வருவாங்க. அப்படி வரும்பொழுது எல்லோரும் சேர்ந்து இந்த கொலையை நான் தான் பண்ணினேன் என்று சொல்ல வேண்டும் என கோபி சொல்கிறார். ஆனால் பாக்யாவுக்கு வந்த சந்தேகத்தின்படி நடந்த உண்மை என்னவென்று கண்டுபிடித்து கோபி இனியவை காப்பாற்றி விடுவார்.