ரோகினியை போலீஸிடம் மாட்டி விட்ட சிட்டி.. முத்துவை காப்பாற்ற மீனா கண்டுபிடித்த உண்மை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து லாக்கப்பில் இருக்கிறார் என்பதற்காக முத்துவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா போராடுகிறார். அந்த வகையில் அருனிடம் உதவி கேட்கும் விதமாக வீட்டிற்கு சென்று முத்துவை எப்படியாவது வெளியே கொண்டுவர உதவி செய்யுங்கள் என கேட்கிறார்.

ஆனால் அருண், முத்து ஜெயிலில் இருப்பதுதான் சந்தோஷம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு மீனாவிடம் சும்மா வாய் வார்த்தைக்காக உதவி பண்ணுகிறேன் என்று சொல்கிறார். ஆனாலும் அருண் மீது நம்பிக்கை இல்லாத மீனா, நானே என் வீட்டுக்காரரை வெளியே கொண்டு வந்து விடுகிறேன் என்று சீதாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

உடனே மீனா, ரதியை சந்தித்து தீபனுக்கு போன் பண்ணி அடிக்க வந்த அடியாட்கள் பற்றி அடையாளம் ஏதாவது தெரியுமா என்று கேட்க சொல்கிறார். அப்பொழுது ரதி, தீபனுக்கு போன் பண்ணி விபரத்தை சொல்லி கேட்கும் பொழுது அடித்து விட்டுப் போன அடியாட்களில் ஒருவர் வாசலில் நின்று நீ சொன்ன வேலையை முடித்து விட்டேன் சிட்டி என்று சொன்னதாக சொல்கிறார்.

அந்த வகையில் சிட்டி பெயரை தெரிந்து கொண்ட மீனா, தெரிந்த போலீஸ் மூலம் முத்துவை அரெஸ்ட் பண்ண போலீஸிடம் சிபாரிஸ் பண்ண சொல்கிறார். அவரும் உதவி பண்ணுகிறேன் என்று சொல்லிய நிலையில் மீனா நடந்த உண்மையையும் சிட்டி பேரையும் சொல்கிறார். உடனே போலீஸ் , சிட்டியையும் அவருடைய ஆட்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொல்கிறார்.

சிட்டி வந்ததும் சிட்டியை அடித்து விட்டு உண்மையை சொல்லு என கேட்கிறார். அப்பொழுது சிட்டி, முத்துக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் இந்த வேலையை சொன்னது வேற ஒருத்தங்க என சொல்கிறார். அப்பொழுது அவர்கள் யார் என்று கேட்டதும் சிட்டி, அடி தாங்க முடியாமல் ரோகிணி என்று சொல்லிவிடுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான மீனாவும் முத்துவும், இந்த பார்லர் அம்மா என்னென்ன வேலை எல்லாம் பார்த்து இருக்கு என்று சொல்லிவிடுகிறார்கள். உடனே போலீஸ், உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும் பொழுது அவ்வப்பொழுது எனக்கும் அவங்களுக்கும் சின்ன சின்ன டீலிங் போய்க் கொண்டிருக்கிறது என சிட்டி சொல்கிறார்.

அதன் பிறகு போலீஸ், ரோகிணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொல்கிறார். அதற்குள் மீனா வீட்டிற்கு சென்று ரோகிணியை பற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் போலீசும் வீட்டிற்கு வந்து ரோகினியை தர தரவென்று இழுத்து ஜிப்பில் ஏற்றுகிறார்கள்.

மனோஜ் பின்னாடியே போய் கெஞ்சுகிறார், எது எப்படியோ சிட்டி செஞ்ச உருப்படியான விஷயம் ரோகிணி மாட்டிக்கொண்டார். இனி இத வைத்து முத்து, ரோகிணி பற்றிய அடுத்த அடுத்த விஷயங்களை தெரிந்துகொண்டு முகத்திரையை கிழிப்பார்.