எதிர்நீச்சல் 2 சீரியலின் நேரத்தை மாற்றப் போகும் சன் டிவி.. புது சீரியலுக்காக வழி விட்ட 3 சீரியல்கள்

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்னத்திரையை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சீரியலை தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் சன் டிவியில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது புது சீரியல்களும் வரிசையில் காத்துக் கொண்டு இருக்கிறது. அதில் முதலில் ஆடுகளம் சீரியல் வரப்போகிறது. அந்த வகையில் வருகிற திங்கட்கிழமை முதல் ஆடுகளம் சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

7 மணிக்கு வந்து கொண்டிருக்கும் அன்னம் சீரியல் இரவு 10 மணிக்கு மாற்றுகிறார்கள். 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரஞ்சனி சீரியல் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அடுத்ததாக தினமும் 9.30மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் 8 மணிக்கு மாற்றப் போகிறார்கள்.

எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் தினமும் 9:30 மணிக்கு கொண்டு வருகிறார்கள். அதாவது புதுசாக வரப்போகும் ஆடுகளம் சீரியல் 7 மணிக்கு தான் வேண்டும் என்று ஒரு வருடமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அதை பூர்த்தி செய்யும் விதமாக ஆடுகளம் சீரியல் 7 மணி இடத்தை பிடித்து விட்டது.

இந்த ஒரு சீரியலுக்காக மற்ற மூன்று சீரியல்களின் நேரத்தை சன் டிவி மாற்றிவிட்டது. ஏற்கனவே எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் பெருசாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கவில்லை. இதில் நேரத்தை வேற மாற்றி இருக்கிறார்கள் என்றால் எந்த மாதிரியான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும், எப்படி மக்களை கவரப்போகிறது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

Leave a Comment