மூன்று முடிச்சு சீரியலில் நந்தினிக்கு சுந்தரவல்லி கொடுத்த வாய்ப்பு.. சந்தோஷத்தில் சூர்யா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், அர்ச்சனாவின் உண்மையான முகம் சூர்யா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல சுந்தரவல்லிக்கும் நன்றாக தெரிந்து விட்டது. இதனால் கோபத்தில் அர்ச்சனா நேரடியாக சவால் விடும் விதமாக சுந்தரவல்லி குடும்பத்தை சும்மா விடமாட்டேன், பழிக்கு பழி வாங்குவேன் என்று சவால் விட்டுவிட்டார்.

இது தாண்டி சூர்யா, அர்ச்சனாவின் முகத்தை காட்ட எனக்கு நந்தினி தான் உதவி செய்தார் என்ற விஷயத்தை எடுத்துச் சொல்கிறார். அடுத்ததாக சுந்தரவல்லி ஆபீஸ் விஷயமாக கைகோர்ப்பதற்கு வேறு ஒரு கம்பெனி இணைகிறார்கள். அதனால் அவர்கள் சுந்தரவல்லி வீட்டிற்கு ஒரு நாள் வருவதாக கூறியிருக்கிறார்.

அந்த வகையில் சேரப்போகும் கம்பெனி நம் கையில் கிடைக்க வேண்டும் என்றால் வருகிறவர்களை நல்லபடியாக கவனிக்க வேண்டும். முக்கியமாக வயிறார அவர்கள் சாப்பிட்டு, மனசார சந்தோஷப்பட வேண்டும் என்று பேசிய நிலையில் சூர்யாவின் அப்பா இந்த பொறுப்பை நந்தினிடம் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லியும் சரி என்று சொல்லிய நிலையில் இந்த விஷயத்தை சூர்யா மற்றும் நந்தினிடம் சொல்கிறார். உடனே நந்தினி சந்தோஷமாக இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நிச்சயம் அவங்க மனதார பாராட்டுவாங்க என்று சொல்லுகிறார்.

நந்தினியின் உற்சாகமான பேச்சும் சந்தோஷத்தையும் பார்த்து சூர்யாவும் மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த வகையில் இதற்குப் பின்னணியில் அர்ச்சனாவின் சூழ்ச்சி இருக்குமா? அல்லது சுந்தரவள்ளியின் மனதை நந்தினி வெல்வதற்கு இது ஒரு வாய்ப்பா இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.