Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பணக்காரி மருமகள் என்று ரோகிணியை தலையில் தூக்கி வைத்து ஆடிய விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்து விட்டது. ஆனாலும் பாட்டி வந்து பஞ்சாயத்து பண்ணி குடும்பத்தில் இருப்பவர்களிடம் ரோகிணிக்கு ஆதரவாக பேசி அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டார். இருந்தாலும் இனி எந்த பொய்யும் சொல்லக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி விட்டு பாட்டி போய்விடுகிறார்.
பிறகு எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுது விஜயாவை நக்கல் அடிக்கும் விதமாக முத்து சுருதி அண்ணாமலை பேசியதே கேட்டு விஜயா கோபம் ஆகிறார். அந்த கோபத்தை காட்டும் விதமாக ரோகிணியை பழி வாங்குவதற்கு விஜயா முடிவு பண்ணி விட்டார். அதனால் எல்லோரும் வெளியே கிளம்பிய நேரத்தில் மனோஜ் ஷோரூம் போது ரோகிணியும் கூடவே கிளம்பினார்.
அப்பொழுது விஜயா, மனோஜிடம் இனி ஷோரூம் முழுவதும் உன்னுடைய கண்ட்ரோல்ல தான் இருக்க வேண்டும். ரோகினி ஷோரூம் வரவே கூடாது என்று சொல்கிறார். இதை கேட்ட ரோகினி நான் போகாமல் எப்படி அவனால் ஷோரூம் நடத்த முடியும். எல்லா விஷயமும் எனக்கு தான் தெரியும், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும் என்ன வாங்கனும் என்ற எல்லா விவரமும் என்னுடைய லேப்டாப்பில் தான் இருக்கிறது என்று சொல்கிறார்.
அதற்கு விஜயா, என் மகன் படித்த படிப்புக்கு அவனால் தனியா எல்லாத்தையும் சமாளிக்க முடியும். அதனால் நீ ஒன்னும் போகத் தேவையில்லை என்று சொல்லி விடுகிறார். மனோஜும் விஜயா பேச்சை கேட்டுக் கொண்டு எதுவும் பேசாமல் ஷோரூமுக்கு போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்து மீனா எதுவும் சொல்ல முடியாமல் ரோகிணியே பாவம் போல் பார்க்கிறார்.
ஆனாலும் எவ்வளவு பட்டும் திருந்தாத ரோகினி இதற்கெல்லாம் காரணம் என்னுடைய மாமியார் தான், ரொம்ப ஓவராக தான் போறாங்க. அவர்களை எப்படி என்னுடைய பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதன் பிறகு ஒரு நாள் இப்படி உட்கார்ந்து என்னுடைய மாமியார் நான் படுற வேதனை போல் படுவாங்க என்று பழிவாங்கும் எண்ணத்துடன் புது அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.
அடுத்ததாக விஜயா போட்ட கண்டிஷன் என்னவென்றால் இனி ரோகிணிக்கு தேவையான சாப்பாட்டை அவளை சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் ரோகிணி சமையல் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மீனா வழக்கம் போல் தியாகியாக உதவி பண்ண போகிறார். அதற்கு ரோகினி எனக்கு தேவையான சமையல் நானே செய்து கொள்கிறேன் என்று சொல்லிய பொழுது சுருதி மாமியாரின் பேவரிட் மருமகள் தற்போது சமையல் காரியாக மாறிவிட்டார் என்று நக்கல் அடித்து பேசுகிறார்.
உடனே ரோகிணி கோபத்துடன் பார்க்கிறார், இருந்தாலும் இனி ரோகிணியின் தலையெழுத்து இதுதான். ஆனாலும் ரோகிணிக்கு இந்த வாழ்க்கை செட்டாகாது என்பதற்காக இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக மறுபடியும் கர்ப்பம் ஆகிவிட்டதாக டிராமா போட்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவருடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட வாய்ப்பு இருக்கிறது.
Irritating story…muthu meena combo always meats failure..Rohini always winner..sadistic director.