Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலுவை காதலிக்கும் போது வீட்டுக்கு தெரியாமல் எல்லா திருட்டு வேலையும் பார்த்தார். ஆனால் சரவணன் மூலமாக வீட்டுக்கு தெரிந்த நிலையில் பாண்டியன் அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிவிட்டார். அந்த சமயத்தில் குமரவேலு எந்த அளவுக்கு மோசமானவன் என்பது அரசிக்கு புரிந்து விட்டது.
அதனால் வீட்டில் பார்த்த சதிசையை கல்யாணம் பண்ணலாம் என்று மனதார ஏற்றுக்கொண்டார். இப்போது குமரவேலு ஒரு போட்டோவை வைத்து பயமுறுத்தியதால் வீட்டில் இருப்பவர்களிடம் உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார். சுகன்யா வந்து குமரவேலுவை பார்த்து பேசி இந்த பிரச்சினையை முடித்துவிடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இதுவரை அரசி செய்த தப்பு வீட்டுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது எல்லாத்துக்கும் தெரிந்த நிலையில் இப்ப வந்திருக்க பிரச்சனையாவது வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி இருக்கலாம். இல்லையென்றால் மீனா மற்றும் ராஜிடம் சொல்லி உதவி கேட்டிருக்கலாம். அதுவும் இல்லாமல் தனியாக குமரவேலுவை பார்த்துட்டு வருகிறேன் என்று முட்டாள்தனமாக அரசி போனதால் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
குமரவேலு அந்த புகைப்படத்தை வைத்து வேண்டுமென்று அரசியை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் தாலி கட்டலாம் என்று சூழ்ச்சி பண்ணினார். அந்த சூழ்ச்சி படி சுகன்யாவும் காய் நகர்த்தியதால் அரசி தற்போது சிக்கிக்கொண்டார். அரசியை காணவில்லை என்று வீட்டில் கோமதி மற்றும் தங்கமயில் தேடுகிறார்கள்.
அந்த வகையில் அரசி வாழ்க்கையே மீட்டெடுக்கும் விதமாக இந்த முறை தங்கமயில், குமரவேலுமிடமிருந்து அரசியை காப்பாற்றப் போகிறார்.
அதன் பிறகு பாண்டியன் பார்த்த சதீஷ் உடன் அரசிக்கு திருமணம் நடந்து விடும். இதற்கெல்லாம் காரணம் தங்கமயில் செஞ்ச உதவி தான் என்று சரவணனுக்கு தெரிய வரும் பொழுது பொண்டாட்டி மீது இருந்த கோபம் எல்லாம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக பழைய மாதிரி பாசத்தை காட்ட ஆரம்பித்து விடுவார்.