Actor Marimuthu: எதிர்நீச்சல் சீரியலின் பில்லராகவும் சன் டிவியின் டிஆர்பி கிங்காகவும் இருந்த மாரிமுத்து கடந்த வாரம் இறைவனடி சேர்ந்தார். ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாக இருந்த அவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் இனி சீரியலை எப்படி பார்ப்போம் என்று கதறி வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாரிமுத்துவின் கனவு இல்லம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே அவர், தான் ஒரு பெரிய வீட்டை வாங்கி இருப்பதாக பல பேட்டிகளில் பெருமையாக கூறியிருக்கிறார். அந்த வகையில் பிரம்மாண்டமான அந்த வீட்டின் விலையே 1.5 கோடியாக இருக்கிறது.
அதில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்த மாரிமுத்து மரத்தாலான சிற்பங்கள், பெயிண்டிங் என கலைநயத்தோடு வீட்டை அலங்கரித்துள்ளாராம். இதை எதிர்நீச்சல் பட குழு உட்பட திரை பிரபலங்கள் பலரிடமும் பெருமையாக சொல்லி விரைவில் கிரகப்பிரவேசம் நடத்த போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் மூன்று பிரபலங்களை பற்றியும் தெரிவித்திருக்கிறார். அதன்படி சிவகுமார், சூர்யா, கார்த்தி முன்னிலையில் தான் வீட்டை திறக்க வேண்டும் என்று மாரிமுத்து மிகப்பெரும் கனவு கோட்டை கட்டி இருக்கிறார்.
ஆனால் விதி, அவருடைய இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இருந்தாலும் அவருடைய கடைசி ஆசையை சிவகுமார் குடும்பத்தினர் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்படி மாரிமுத்துவின் குடும்பத்தினர் அவரின் இழப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு இந்த கிரகப்பிரவேச விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.