அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் 3 சீரியல்கள்.. பாக்கியலட்சுமிக்கு பிறந்த விடிவு காலம்

Vijay Tv serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் சில சீரியல்களை மக்கள் எட்டி கூட பார்க்காமல் புரோமோவை மட்டுமே பார்த்து வருகிறார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் பல சீரியல்கள் கம்மியான புள்ளிகளை பெற்று விஜய் டிவி சீரியலுக்கு ஒரு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் அதிரடியாக எடுத்த முடிவின்படி சில சீரியல்களை முடிப்பதற்கு விஜய் டிவி சேனல் தயாராகி விட்டது. இதில் இந்த வாரத்துடன் பொன்னி சீரியல் முடிய போகிறது. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் இந்த சீரியலில் பெருசாக கதை எதுவும் இல்லை. அத்துடன் ஆர்டிஸ்ட்கள் நடிப்பும் சொல்லும் படி மக்களை கவரவில்லை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தாக்குப்பிடித்து வந்த இந்த சீரியல் இனியும் கொண்டு போக வேண்டாம் என்று இந்த வாரத்துடன் சுபம் போட தயாராகி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து ஆகா கல்யாணம் மற்றும் சக்திவேல் சீரியலும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடியப்போகிறது. ஆனால் இந்த சீரியல்களை எல்லாம் விட பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடமாக ஓடிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் மக்களை அதிக அளவில் கவர்ந்த இந்த சீரியல் போகப் போக கதை எதுவும் இல்லாமல் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து அடித்து வருகிறது.

இதனால் பாக்கியலட்சுமி சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு சீரியலை கொண்டு வாங்க என்று மக்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த சீரியலுக்கு எதிராக போர் கொடியை தூக்கி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடித்து விடலாம் என்று சேனல் தரப்பில் இருந்து முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் இனி அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் கதை நகர்ந்து பாக்யா தனி ஆளாக நின்று போராடியதற்கு விடிவு காலம் பிறக்கும் விதமாக கதை பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக மாறி மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மொத்த டீமுக்கும் பூசணிக்காய் உடைத்து சுபம் போடப் போகிறார்கள்.