Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி ஆசைப்பட்டதை நிறைவேற்றும் விதமாக பொருட்காட்சியில் நதி அப்பளக்கட்டை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் அவருக்கு தெரிந்த நபரிடம் பேசி காவிரிக்கு அந்த காண்ட்ராக்ட் வாங்கி கொடுத்து விட்டார். காவிரியும் அந்த ஆபீசரை சந்தித்து எல்லா விஷயத்தையும் பேசிட்டு சந்தோஷமாக வீட்டிற்கு வருகிறார்.
அப்பொழுது வெண்ணிலா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஷயம் டிவியில் ஒளிபரப்பாகி வருவதை பார்த்த சாரதா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். உடனே குமரன், காவேரிக்கு போன் பண்ணி வெண்ணிலா பேசிய வீடியோவை பார்க்கச் சொல்கிறார். உடனே காவிரி பைக்கை நிப்பாட்டி விட்டு போனில் வெண்ணிலா பேசிய விஷயத்தை பார்த்து காவிரியும் அதிர்ச்சியாகிவிட்டார்.
இன்னொரு பக்கம் விஜய், காவேரி ஆசைப்பட்ட மாதிரி காண்ட்ராக்ட்ம் கிடைத்துவிட்டது வெண்ணிலாவும் நம்மளை விட்டு போய்விட்டால் இனி நானும் காவிரியும் சந்தோஷமாக வாழலாம் என்ற நினைப்பில் நிம்மதியான தூக்கத்துக்கு போய்விட்டார். அப்பொழுது வெண்ணிலா பேசிய வீடியோவை தாத்தா பாட்டி பார்த்த நிலையில் விஜய்யை எழுப்பி வெண்ணிலா பேசிய வீடியோவை காட்டுகிறார்கள்.
உடனே எதற்கு வெண்ணிலாவும் மாமாவும் இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார்கள். நான் பேசிய பொழுது எல்லாம் சரிதான் என்று வெண்ணிலவின் மாமா சொல்லிய நிலையில் தானே, வெண்ணிலாவே அனுப்பி வைத்தோம். இப்போ இவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணி ஏன் என்னையும் காவிரியையும் பிரிக்க நினைக்கிறார்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் நானும் காவிரியும் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்த பொழுது இப்படி ஒரு அவமானத்தை வெண்ணிலா ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று பீல் பண்ணுகிறார்.
ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்கு தான் என்பதற்கு ஏற்ப வெண்ணிலாவின் சுயரூபம் விஜய்க்கு தெரிந்து விட்டது. இதுவரை ஏதோ ஒரு விதத்தில் விஜய் மற்றும் காவிரிக்கு மனதில் ஓரமாக வெண்ணிலாவுக்கு துரோகம் பண்ணி விட்டமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. ஆனால் தற்போது வெண்ணிலாவின் செயல்களை பார்த்து விஜய் மற்றும் காவிரி அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கு ஈஸியாகிவிடும்.
அடுத்ததாக இந்த பிரச்சினையை சாரதா குடும்பத்தில் இருப்பவர்கள் பேசிப்பேசி பெரிசாக்கி இதற்கெல்லாம் காரணம் காவேரி தான் என்று காவிரியை திட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக குமரனின் அம்மா, நான் கூட அந்த விஜய் பையன் நல்ல பையன் அதனால் தான் காவிரி வேணும் என்று இங்கே வந்து தங்கி இருக்கிறார் என்று நினைத்து எப்படியாவது காவிரியை சேர்த்து வைக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆனால் இதற்கு பின்னர் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்று தெரியாமல் போச்சு. நல்லவேளை காவிரி தற்போது அந்த வீட்டில் இல்லாமல் நம்முடன் இருக்கிறார். இதுதான் சரியான முடிவு என்று எல்லோரும் காவிரி ஆசைக்கு எதிராக நிற்கிறார்கள். ஒருத்தர் கூட காவிரிக்கு சப்போர்ட் ஆகவும் ஆதரவு கொடுக்கும் விதமாகவும் பேசவில்லை.