Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவின் மிகப்பெரிய ஆசைசென்னையில் வேலை பார்க்க வேண்டும் என்று தான். தற்போது அது நிறைவேறும் விதமாக நிலாவுக்கு வேலை கிடைப்பது உறுதி ஆகிவிட்டது. இந்த சந்தோஷத்தை நிலா, சோழனுடன் கொண்டாடி வருகிறார். அடுத்ததாக கார்த்திகாவின் கல்யாணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டுக்கு போவதற்கு தயாராகி விட்டார்.
ஆனால் போகும் முன் சேரன் மாமாவை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களிடம் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு கிளம்புகிறார். உடனே கார்த்திகாவின் அம்மா, சேரன் வீட்டுக்கு போக கூடாது என்று சொல்கிறார். அப்பொழுது கல்யாணத்துக்கு முதல் நாள் சேரன் மாமா தான் எனக்கு வேண்டும் என்று அவருடைய வீட்டுக்கு போனேன்.
அவரும் என் கழுத்தில் தாலி கட்ட தயாராக இருந்த பொழுது நீங்க கேட்டதற்காக என்னை திருப்பி போக சொன்னார். அப்படிப்பட்டவருக்கு இப்பொழுது எனக்கு கல்யாணம் ஆனது என்று தெரியும். அதனால் அவரை நம்பி என்னை விடலாம் என்று சொல்லி சேரன் வீட்டிற்கு போகிறார். அங்கே போதும் சேரன் வேலைக்கு கிளம்பும் பட்சத்தில் கார்த்திகாவின் ஞாபகம் அவருக்கு வந்துவிட்டது.
அந்த சமயத்தில் கார்த்திகாவும் வீட்டுக்குள் நுழைந்து சேரன் மாமா என்று கூப்பிடுகிறார். உடனே சேரன், கார்த்திகாவை பார்த்து பேசுகிறார். அப்பொழுது கார்த்திகா நான் என்னுடைய புகுந்து வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி கிளம்பப் போகிறார். அந்த வகையில் இனி கார்த்திகாவின் சேப்டர் க்ளோஸ் என்பதற்கு ஏற்ப சேரனுக்கு புதுசாக ஒரு ஜோடி வரப்போகிறது.
அவர் யார் என்றால் சேரன் வேலை பார்க்கும் இடத்தில் வடநாட்டுக்காரர் ஒருவர் சேரனின் நண்பராக இருக்கிறார். இவருடைய தங்கைதான் சேரனுக்கு ஜோடியாக வரப்போகிறார். அந்த வகையில் வடநாட்டு காரியாக தான் சேரனுக்கு மனைவியாக அமையப் போகிறது. ஆனால் இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அண்ணன் தம்பிகளின் பாசத்துக்கு விரிசல் ஏற்படுத்தும் விதமாக வில்லி கேரக்டரில் சேரனின் மனைவி வரப்போகிறார். இதற்கு இடையில் நிலா வேற, எந்த சொந்தமே இல்லாமல் அந்த வீட்டில் இருப்பதால் நிலாவுக்கு பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்பதற்காக புதுப்புது கதைகளத்துடன் எதிர்பார்க்காத திருப்பங்கள் வரப்போகிறது.