புயல் வேகத்தில் போய்கிட்டு இருக்கேன்.. குறுக்க எதுவும் தண்ணீ லாரி வந்துறாம பாத்துக்கோ..? என்பது போல இயக்குனர் நெல்சன்ஜி சிவகார்த்திகேயனுக்கு ஒரு டாக்டர், தளபதிக்கு ஒரு பீஸ்ட் அடுத்து சூப்பர் ஸ்டாருக்கு என அடித்து நொறுக்கி சென்று கொண்டு இருக்கிறார். தலைவர் 169 வரப்போகிறது என்று ஒரு சின்ன வீடியோ வந்ததுக்கே இங்கே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் கிறுக்குப் பிடித்து இருக்கின்றனர்.
எப்போது திரையரங்குகளில் தெறிக்கப் போகிறது தலைவரின் ஸ்டைல் என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். பீஸ்ட் படத்தில் ஓப்பனிங் பாடலான அரபிக்குத்து பாடலின் புரோமோ ஒன்று வெளியானது. இது ஒரு சரியான வியாபார யுக்தி என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தது. அதனை தொடர்ந்து நெல்சன் தனது படங்களில் தொடர்ந்து செய்து வருகிறார். அந்த அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் அணியும் அப்படியே தொடர்ந்து வீடியோவில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி விடுகின்றனர்.
நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சு என்ற பாடலில் ஆரம்பித்த இந்த கூட்டணி, இப்போது தளபதியின் பீஸ்ட் வரை நீண்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி, தலைவரின் 169 வது படத்தில் ஒரு பாடலை நெல்சனுக்கு மிகவும் பிடித்தப் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் தான் எழுத இருக்கிறாராம். என்னப்பா சொல்லவே இல்லை..? என்பது போல தான் ரசிகர்களின் ரியாக்க்ஷன் உள்ளது.
நெல்சன் படத்தை சந்தைப்படுத்த அவர் பயன்படுத்தும் ஒரு யுக்தி படத்தின் பாடல் உருவாகும் போது ஏற்படும் கலகலப்பான உரையாடல்களை இயக்கி அதனை ஒரு முன்னோட்ட வீடியோவாக வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்து விடுகிறார். அதே போல தான் பீஸ்டின் அரபிக்குத்து பாடலின் போதும் தளபதி விஜய் போனில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் தற்போது தலைவர் 169 வது படத்திற்கு தலைவர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிவார்த்திகேயன் என ஒரு பிரமாண்ட சங்கமம் நடந்தால் அது தான் சிறப்பான தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஒரு ரசிகனாக திரையில் பார்த்து கை தட்டி, விசில் அடித்து கொண்டாடிய சிவகார்த்திகேயன் இன்று அவரின் பட பாடலை எழுத இருக்கிறார் என்பது சிவகார்த்திகேயனின் உழைப்பின் பயனாக பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இந்த பாட்டின் இசையையும், காப்பி அடித்து அனிருத் சிக்கிக்கொள்ளாமல் இருந்தால் சரி என பீஸ்ட்டின் அரபிக்ககுத்து பாடலை கேட்டு கடுப்பான தளபதி விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி போய்க் கொண்டே இருந்தாள் பாடலாசிரியராக மாறி நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார் என்று ரசிகர்கள் சற்று கவலையில் தான் உள்ளனர்.