பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 6 வேடங்களில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் 16 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களின் மனதில் சிரிப்பழகி ஆக நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அப்போ பார்த்த மாதிரி இப்போதும் அழகு குறையாமல் செம பியூட்டி ஆன லுக்கில் சர்தார் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி இருக்கிறார் லைலா. முதலில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா, அதன் பிறகு சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்து, பிரியா பிதாமகன் மௌனம் பேசியதே போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.
Also Read: 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்த லைலா.. இந்த ஜோடி நல்ல ஜோடி தான்
தற்போது சூர்யாவின் தம்பி உடன் இணைந்து சர்தார் படத்தின் மூலம் நடித்து மீண்டும் சினிமாவில் கலக்க களம் இறங்கி இருக்கிறார். சூர்யா மட்டுமல்ல விக்ரமுடன் தில், அஜித்துடன் பரமசிவம் உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த லைலா, 90’s கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக மாறியவர்.
அதன் பிறகு கடைசியாக அஜீத்துடன் திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க களமிறங்கியிருக்கிறார். இவர் ஈரான் நாட்டை சேர்ந்த தொழிலதிபரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளது.
Also Read: கார்த்தி படத்தின் வசூலுக்கு செக் வைத்த வெற்றிக்கூட்டணி.. தீபாவளி ரேஸில் இணைந்த புதிய படம்
பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய லைலா சமீபகாலமாக சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, மற்றும் ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கினார். தற்போது லைலா, சர்தார் படத்தில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரத்தில், 16 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே அழகுடன் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார்.
மேலும் சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்துக்கு கண்டிப்பாக சர்தார் படம் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நம்ம வந்தியதேவனா இது? No.1 ட்ரெண்டிங்கில், 6 கெட்டப்பில் மிரட்டும் கார்த்தியின் சர்தார் பட டீசர்