வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவுக்கு ஜோடியான வாரிசு நடிகை.. பக்கா காம்பினேஷனில் தயாராகும் படம்

சிம்புவுக்கு கொஞ்ச நாளாகவே சுக்கிர திசை அடித்து வருகிறது. இவர் நடித்து வெளிவரும் படங்கள் அனைத்தும் தற்போது வெற்றிகரமாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகுது. இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்திற்குப் பிறகு இவருக்கு எல்லாம் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல இந்த படங்கள் மூலம் போன வேகத்தில் திரும்ப வந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தை பற்றி சில அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறார். இது இவருடைய 56வது தயாரிப்பின் படமாகும். மேலும் கமலின் மிகப்பெரிய திட்டமே வெற்றி நாயகனாக தற்போது வலம் வரும் சிம்புவை வைத்து பெரிய லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்று பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கினார்.

Also read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அதாவது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயினான தீபிகா படுகோனே நடிக்க வைப்பதாக அனைத்து வேலைகளிலும் இறங்கினார். ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை பார்த்து அப்படியே சைலன்டாகிவிட்டார். அதனால் தமிழ் நடிகையை யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்த இவருக்கு திடீரென்று வாரிசு நடிகை தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர் வேறு யாருமில்லை லேட்டஸ்ட் கன்னடத்து பைங்கிளியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தான்.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் அழ மோதி தவித்த நிலையில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் தான் கமல் தயாரிப்பில் சிம்புவுடன் இணையாய் இருக்கிறார். இவர் முதன் முதலாக சிம்புவுக்கு ஜோடியாக சேர்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் பக்கவாக அமையப் போகிறது. இது சம்பந்தமாக படக்குழு ஏற்கனவே இவருடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து சம்மதத்தை வாங்கி விட்டார்கள்.

Also read: ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.. தளபதி-68 உறுதியாகும் நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு வைத்த சூனியம்

இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். மேலும் இப்படத்தை தயாரிப்பாளர்கள் அவர்களுடைய பாணியில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கடைசியில் “பிளட் அண்ட் பேட்டில் அதாவது ரத்தமும் சண்டையும்” என்ற டேக்லைனுடன் வழங்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பொழுதே சிம்புக்கும், கமலுக்கும் இப்படம் வேற லெவல்ல கொண்டு போகப் போகிறது என்று தெரிகிறது.

மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிம்புவும் இணைந்து முதன்முதலாக நடிக்க இருப்பதால் இவர்கள் இருவருடைய ரசிகர்களும் இந்த ஜோடியை பார்ப்பதற்கு ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள். அதற்கேற்ற மாதிரி இன்னும் விறுவிறுப்பை கூட்டும் விதமாக அப்டேட்டுகள் வெளிவரும்.

Also read: மார்க்கெட் இழந்த நிலையில் கம்பேக் கொடுத்த 5 நடிகர்கள்.. சொல்லி அடித்து தரமான படத்தை கொடுத்த சிம்பு

Trending News