வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

12 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சிம்புவுக்கு ஜோடியாகும் இளவரசி

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பிக்க இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

Also read:விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவுக்கான கதை இல்லை.. கௌதம் மேனனை ஒதுக்கிய 2 டாப் ஹீரோக்கள்

சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது. முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்து வெளிவந்த அந்த திரைப்படத்தில் திரிஷா, சிம்பு இருவரும் கார்த்திக், ஜெசி என்ற கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்கள்.

இப்போது வரை அந்த கேரக்டர்களை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம்தான் அது. அந்த திரைப்படம் தான் தற்போது மீண்டும் உருவாக இருக்கிறது. வெந்து தணிந்தது காடு வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் தான் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Also read:திரும்பத் திரும்ப மல்லுக்கட்டும் சிம்பு-தனுஷ்.. ஒரே போடாய் எஸ்டிஆர் கையில் எடுக்கும் புது ஆயுதம்

ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதை சிம்புவின் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தற்போது கௌதம் மேனன் இந்த பட வேலைகளை ஆரம்பிப்பதில் பிஸியாக இருக்கிறார். சிம்புவின் நடிப்பில் வெளியாக இருக்கும் பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளி போய் வருகிறது.

அந்த இடைவெளியில் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக திரிஷாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அந்த வகையில் குந்தவையாக நம் மனதை கொள்ளை கொண்ட த்ரிஷா மீண்டும் ஜெஸியாக வர இருக்கிறார்.

Also read:நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய திரிஷா.. எதிரும் குந்தவை மார்க்கெட்

Trending News