ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விரைவில் தலைவரின் 170 பட அறிவிப்பு.. பிரம்மாண்ட மேடையை தேர்வு செய்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுப்பார். அதிலும் தனக்கு பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு தோல்வி படம் கொடுத்தால் மீண்டும் தனது படத்தில் சேர்க்க யோசிப்பார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர் வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் உடன் ரஜினி கைகோர்த்தார். ஆனால் அதன் பின்பு நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. ஆனாலும் கொடுத்த வாக்கில் இருந்து பின் வாங்காமல் ரஜினி நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினியா இது? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் அண்ணனா!

இந்நிலையில் தலைவர் 170 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதாவது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லியர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பங்கு பெற உள்ளனர். இதில் தலைவர் 170 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

Also Read : ஒரே மேடையில் மல்லுக்கட்ட போகும் ரஜினி, கமல்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்தினம்

மேலும் லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது. ரஜினி தனது 170 ஆவது படத்திற்கான அறிவிப்புகள் பிரம்மாண்ட மேடையான பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சை பயன்படுத்த உள்ளார்.

இதனால் நாளை நடக்கவுள்ள இந்த நிகழ்வுக்கு பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினியின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாரை ஒரே மேடையில் பார்க்கவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

Also Read : 890 நாட்கள் ஓடிய ரஜினியின் ஒரே படம்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாதனை

Trending News