Sivakarthikeyan in Amaran: சிவகார்த்திகேயன் படத்தை நம்பி தியேட்டர்களில் போய் பார்க்கலாம். ஏனென்றால் இவருடைய படம் பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுக்காது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்புகளை பெற்று இருக்கிறது. இன்னொரு விஷயம் இவருடைய படத்தை குடும்பத்துடன் பார்ப்பதற்கு முக்கிய காரணம் சின்ன குழந்தைகளை அதிகமாக கவர்ந்ததினால்.
ஏனென்றால் இதுவரை அவர் நடித்த படங்களில் காமெடி கலந்த நகைச்சுவை மற்றும் பேச்சுக்கள் அனைத்தும் ஒரு விதமான கவனத்தை ஈர்த்தது. ஆனால் இதுவரை பார்த்திடாத சிவகார்த்திகேயனை முதன்முதலாக வித்தியாசமான ஒரு லுக் உடன் கேரக்டரில் பார்க்க போகிறோம். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் டீசர் வேற லெவலில் இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு டீசர் மற்றும் டைட்டிலை வெளியிட்டார்கள். அந்த வகையில் அந்த டீசரை பார்க்கும் பொழுது அமரன் படம் எந்த மாதிரியான ஒரு கதையை தழுவி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
Also read: சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் இறக்கிவிட்ட 50-வது பட போஸ்டர்.. மொட்டை கெட்டப்பில் மிரட்டல்
அதாவது 2014 ஆம் ஆண்டு அப்பாவி மக்களை காஷ்மீர் சூழ்ந்து கொண்டு அட்டாக் செய்யும் போது அப்போ அந்த தீவிரவாதத்தில் போரிட்டு சண்டையிட்டு வீரமரணம் அடைந்த ஒரு தமிழன் மேஜர் முகுந்து வரதராஜன் அவருடைய பயோபித்தான் அமரன் படமாக உருவாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் மிலிட்டரி சம்பந்தமான காட்சிகளும் துப்பாக்கி சூடு, பாம் மற்றும் சண்டைக் காட்சிகள் அதிகமாக நிரம்பி இருக்கிறது.
மேலும் இப்படத்தில் டீசரை பார்க்கும் பொழுது ரொம்பவே அருமையாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வேற லெவலில் பார்க்கலாம். அடுத்த கட்ட லெவலுக்கு போவதற்கு லட்சியத்தை அடைந்து விட்டார் என்று ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆனால் இதில் சிவகார்த்திகேயன் ஒரு சிப்பாயாக இருந்து கொண்டு கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார்.
சென்னை பாஷையில் தா என்று முடியும் வார்த்தையில் பேசி இருக்கிறார். அந்த வகையில் ஒரு சிப்பாய் இப்படி பேசுவது தவறு என்று சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஆண்டவர் கமல் இதை பார்த்தும் அப்படியே விட்டுவிடுவாரா. அல்லது மறைப்பாரா என்றும் தெரியவில்லை. ஒருவேளை கமல் படங்களில் கெட்ட வார்த்தை இருப்பது ஒன்னும் புதுசு இல்லை. அதே மாதிரி இதையும் விட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Also read: தனுசையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. டைட்டில் காப்பியில் இத்தனை படங்களா?