வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவின் தாதா லுக்கை பார்த்து மிரண்ட இயக்குனர்.. இணைய போகும் வெற்றி கூட்டணி

சிம்பு இப்போது அடுத்தடுத்த நகர்வின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கும் இவர் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு 2 படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவருடைய தாதா கெட்டப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர் ஒருவர் விரைவில் அவருடன் கூட்டணி அமைக்க இருக்கிறாராம். அதாவது சிம்புவின் நடிப்பில் வெளிவந்த பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது.

Also read: ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா.? பலமுறை வெற்றிமாறனை சுற்றி வந்த ஹீரோ, வச்சு செய்த சம்பவம்

அதிலும் அவருடைய தாதா லுக்கை பார்த்து இயக்குனர் வெற்றிமாறன் மிரண்டு விட்டாராம். ஏற்கனவே இவர் சிம்புவை வைத்து வட சென்னை திரைப்படத்தை எடுக்க இருந்தார். ஆனால் அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனது. அதன் பிறகு இந்த கூட்டணி இணைவதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லை. வெற்றிமாறனும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார்.

ஆனால் இப்போது அவர் பத்துதல படத்தில் சிம்புவின் அசத்தல் கெட்டப்பை பார்த்து ஆச்சரியத்தில் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் விரைவில் சிம்புவுக்கு ஒரு கதையை ரெடி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இப்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சிம்புவை வைத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

Also read: விடுதலையால் ஓரம் கட்டப்பட்ட பத்து தல.. சிம்புவுக்கு வெற்றியா, தோல்வியா? மொத்த ரிப்போர்ட்

இது பத்து தல படத்தை பார்த்து திடீரென எடுத்த முடிவு தான். இருப்பினும் இந்த ப்ராஜெக்ட்டை விரைவில் ஆரம்பித்து விட வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருக்கிறாராம். அந்த வகையில் அவரின் விடுதலை 2 திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படமும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

அதை முடித்துவிட்டு சிம்புவின் கதையை அவர் கையில் எடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அது நிச்சயம் ஒரு நாவல் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் கதையாகத்தான் இருக்கும் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் வட சென்னை 2 திரைப்படத்திற்கு முன்பே இந்த கூட்டணி இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

Trending News