Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Suriya : வாடிவாசலுக்கு பிறகு சூர்யா லெஜென்ட்.. வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

Suriya : வாடிவாசலுக்கு பிறகு சூர்யா லெஜென்ட்.. வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் முதல்முறையாக சூர்யாவின் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. அதோடு […]

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் முதல்முறையாக சூர்யாவின் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.

அதோடு 3d அனிமேஷனில் பத்திருக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சூரியின் விடுதலை 2 படத்தை இப்போது வெற்றிமாறன் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாடிவாசல் படத்தை புகழ்ந்த மிஷ்கின்

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா லெஜண்டாக ஆகத்தான் இருப்பார் என இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது ஒரு பட விழாவுக்காக மிஷ்கின் கலந்து கொண்ட போது வெற்றிமாறனை பற்றி பேசி இருந்தார்.

வெற்றிமாறனும் நானும் ஒன்றாக பணியாற்றும் போது இந்த படத்தின் கதையை என்னிடம் கூறினார். நான் அப்படியே அசந்து போய் விட்டேன். இந்த கதைக்கு பொருத்தமான நடிகர் சூர்யா தான். அவர் ஒரு அசாத்தியமான நடிகர் என்றும் மிஷ்கின் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் வாடிவாசல் படத்தைப் பற்றி பல வருடமாக கூறி வருகிறீர்கள். முதலில் படப்பிடிப்பை தொடங்குங்கள் என்று கமெண்ட் செய்திருக்கின்றனர். மேலும் வெளிநாட்டில் இப்போது காலை காண பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.