வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தங்கலான் கெட்டப்பில் வந்த கரிகாலனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. என்ன கொடுமை சார் இது.!

இன்று எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் சோசியல் மீடியாவை திறந்தாலே இந்த செய்திகள் தான் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கும் இப்படம் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் படத்தில் நடித்திருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் இன்று ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்து வருகின்றனர். அதில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படத்தை பார்க்கலாம் என்று வந்திருந்த விக்ரமுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

Also read: வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

தற்போது தங்கலான் திரைப்படத்தில் பிஸியாக இருந்தாலும் அவர் கடந்த பல நாட்களாகவே பொன்னியின் செல்வன் 2 பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதை தொடர்ந்து படத்தைப் பார்க்க தங்கலான் கெட்டப்பில் வந்திருந்த ஆதித்த கரிகாலனை ரசிகர்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டனர்.

இப்படி ஆரவாரத்துடன் விக்ரம் வடபழனியில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்தார். அதே போன்று ஆழ்வார்கடியான் நம்பி கேரக்டரில் நடித்திருந்த ஜெயராமும் படத்தை பார்க்க வந்திருந்தார். ஆனால் அங்கு சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஐமேக்சில் அவர்களால் படத்தை கண்டு களிக்க முடியவில்லை.

Also read: களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதைத்தொடர்ந்து சாதாரண திரையில் தான் அவர்களால் படத்தை பார்க்க முடிந்திருக்கிறது. இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத விக்ரம் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்ததில் அவருக்கு ஏகபோக மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கிறது.

அதன் பின்னர் அனைவருடனும் இணைந்து அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். இப்படி ஐமேக்சில் படத்தை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறார் விக்ரம். ஆனாலும் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடியதில் தியேட்டரே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சென்னையின் முக்கிய இடங்களிலும் ரசிகர்களின் ஆரவாரம் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Also read: பெண்களின் கனவு நாயகன் தாத்தாவாகிட்டாரா?. பேரனுடன் ரகுமான் வெளியிட்ட புகைப்படம்

Trending News