சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அமைச்சரான உடன் கமலுக்கு வைத்த முதல் ஆப்பு.. ஆண்டவரை அம்போவென விட்ட உதயநிதி

எம்எல்ஏவாக அரசியலில் களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் குறுகிய காலத்திலேயே அமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கி கௌரவித்தார். அதன்படி அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சர் பதவியை ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனக்கு இப்படி ஒரு பொறுப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி என்றும், இதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அமைச்சராகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also read: 56 வயதில் ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி.. 45 வயதிலேயே கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், என்ன பொறுப்பு தெரியுமா?

அந்த வகையில் அவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் அவர் சினிமாவில் நடிக்கும் கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார். இது திரையுலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடைய இந்த அறிவிப்பு கமல்ஹாசனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனென்றால் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரித்து வரும் கமல் சமீபத்தில் உதயநிதியை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பல வருடங்களாக சினிமாவில் நல்ல நல்ல படங்களை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் தன்னுடைய 54வது திரைப்படத்தில் உதயநிதியை கதாநாயகனாக நடிக்க வைக்க முன் வந்தது.

Also read: முதல் பாதி டப்பிங்கில் அரண்டு போய் விட்டேன்.. விக்ரம் படத்தில் மறக்கமுடியாத அனுபவத்தை ஷேர் செய்த லோகேஷ்

அதை ஏற்றுக் கொண்ட உதயநிதியும் இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த கமலுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவருக்கு கிடைத்த இந்த அமைச்சர் பதவியால் அவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கமல் தயாரிப்பில் நடிக்க இருந்த ஆர்யா சம்பளப் பிரச்சனையின் காரணமாக அதிலிருந்து விலகினார்.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தயாரிக்க இருந்த கமல் அது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த படமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்படி ஒவ்வொரு நடிகராக விலகி வரும் வேளையில் உதயநிதியும் கமலை அம்போ என தவிக்க விட்டிருப்பது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உதயநிதியின் இந்த அறிவிப்புக்கு கமல் என்ன பதில் அளிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: கமலைக் கலாய்த்து தள்ளிய சிவாஜி.. ஷூட்டிங் ஸ்பாட்டையே பங்கம் செய்த நடிகர் திலகம்

Trending News