கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. குறிப்பாக, இவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’.டைரக்டர் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன்,தெலுங்கிலும்‘பிச்சகாடு’என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு வெளியான‘பிச்சைக்காரன் 2’படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த‘பிச்சைக்காரன் 3’படம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.அதன்படி,இப்படத்தை ‘மெட்ரோ’,‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.ஏற்கனவே‘கோடியில் ஒருவன்’படத்தில் விஜய் ஆண்டனியும் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
மேலும், இப்படத்தின் கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளதாகவும், தனது சினிமாப்பயணத்திலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக‘பிச்சைக்காரன் 3’அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகமும் இருக்கும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. இப்படத்தின் கதை முந்தைய பாகங்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட் ஆக இருக்கும் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
படப்பிடிப்பு 2027 பிப்ரவரியில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உருவாக்கும் புதிய முயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




